காய தழும்புகளைக் குணப்படுத்த...
பொதுவாக காயங்கள், அறுவைச் சிகிச்சை, தடுப்பூசி, அம்மைப் புண், முகப் பருக்கள் மற்றும் சில காரணங்களினால் தழும்புகள் ஏற்படுவது உண்டு.
அவை காலப்போக்கில் மறைந்து விடுவதும் உண்டு. ஆனால் சில தழும்புகள் வளர்ந்து பெரிதாக விரிவடைகின்றன. இதனால் அவற்றின் மீது கை பட்டாலோ, உடைகள் பட்டாலோ அரிப்பு, எரிச்சல் ஏற்படும்.
தழும்புகள் இவ்வாறு விரிவடைவதால் உடலின் அழகு பாதிக்கவும் செய்யும். இந்தத் தழும்புகள் முதலில் அடர் பழுப்பு நிறமாக இருந்து மேலும் மேலும் சூரிய ஒளிபட கறுப்பு நிறமாக மாறிவிடும்.
புற்று நோய் போன்ற அபாயம் உள்ளதா என்பதை அறிய தழும்புகளின் திசுக்களை சோதித்துப் பார்த்து முடிவு செய்யலாம். ஹோமியோபதியில் மூன்றுவித மருந்துகள் உள்ளன. தழும்புகளின் தன்மைக்கேற்ப மருந்துகளை வழங்கிக் குணப்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.