காலையில் எழும்போதே தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், கன்னம், மூக்கு, கண்கள் ஆகிய பகுதிகளில் வீக்கம், வலி இருந்தால் சைனஸ் பிரச்னை என்று கூறலாம்.
நமது முக எலும்பு அமைப்புகளில் மூக்கு மற்றும் கண்களையொட்டி நான்கு ஜோடி துளைகள் உள்ளன. அவற்றுக்கு சைனஸ் என்று பெயர். வைரஸ், பாக்டீரியா என ஒவ்வாமையை ஏற்படுத்தும் நுண் துகள்களை உடலுக்குள் செல்ல விடாமல் தடுக்கும் மெல்லிய சளித் திரவமும் சைனஸ் உறுப்பில் படிந்திருக்கும். சளித் திரவம் மூக்கின் வழியாக அவ்வப்போது வெளியேற வேண்டும். ஆனால் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் தொற்றும்போதும், ஜலதோஷத்தினால் அழற்சி ஏற்படும்போதும் மூக்கினுள் உள்ள மெல்லிய சவ்வுப் படலம் விரிவடைந்து அடைப்பை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகளும், பாதிப்புகளும்...: காலையில் தலைவலி, குனிந்தால் தலைவலி அதிகரிப்பது, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், பகலிலும் இரவிலும் இருமல், கட்டிச் சளி (மஞ்சள் நிறத்தில் அல்லது மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் சளி இருத்தல்), தலை பாரம், தொண்டைவலி, கரகரப்பு, தொண்டை வறட்சி, மூக்கில் ரத்தம் கசிதல், சுவாசக் காற்றில் நாற்றம், முகம் கண்கள், நெற்றிப் பகுதியில் வீக்கம், காய்ச்சல், உடல் வலி, உடல் சோர்வு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் மருந்துகள், சளியைக் கரைக்கும் மருந்துகள், பாக்டீரியா, வைரஸ் நுண்கிருமிகளை அழிக்கும் மருந்துகள், மூக்கடைப்பை நீக்கும் ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனைத் தரும்.
டாக்டர் ஆர்.விஜய் ஆனந்த்,
உதவிப் பேராசிரியர்,
ஸ்ரீ சாய்ராம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, தர்மா டவர்ஸ்,
புதிய எண். 88,
நெல்சன் மாணிக்கம் சாலை,
சூளைமேடு, சென்னை-94.
தொ.பே.: 94441 08041.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.