
நோயால் ஏற்படும் பாதிப்பைவிடக் கொடுமையான பாதிப்புகளை அதற்கு சாப்பிடும் மருந்துகள் ஏற்படுத்துகின்றன. எனவே, மருந்தில்லா மருத்துவ முறைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்களும், மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகளைப் பற்றி அறியத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மருந்தில்லா மருத்துவ முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
""உணவே மருந்து மருந்தே உணவு'' என்ற சித்தர்களின் வாக்கும் இதையே நமக்கு உணர்த்துகிறது. மருந்தில்லா மருத்துவ முறைகளில் முதலிடம் வகிப்பது அக்குபஞ்சர்.
""நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் கலவைதான் மனிதன்'' எனும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு உயிர்ச் சக்தியை சமப்படுத்தி நோய் எதுவானாலும் அதைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மருத்துவ முறையின் தனிச் சிறப்பு.
விபத்து போன்ற நிலைகளில் மட்டுமே இந்த மருத்துவ முறையால் உடனடியாக பலன் அளிக்க முடியாது. அக்குபஞ்சர் மருத்துவமுறையின் வடிவமைப்பு நமது பழனியில் வாழ்ந்த போகர் என்ற சித்தரின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதும், பழனி முருகர் சிலையில் அக்குபஞ்சர் சக்தி ஒட்டப் பாதைகளும், புள்ளிகளும் இடம்பெற்றிருப்பதும் நம் தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் தகவல்கள்.
நம்மை விட்டு வெகுதூரம் விலகிப் போன இக்கலை காலச் சக்கரத்தின் சுழற்சியால் மீண்டும் உலகம் முழுவதும் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. வீட்டிற்கு ஒரு அக்குபஞ்சர் மருத்துவரை உருவாக்கி ""நோயற்ற மருத்தில்லா உலகத்தை படைக்க வேண்டும்'' என்பது எங்களது லட்சிய இலக்கு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.