

இந்தியா உள்பட உலகம் முழுவதும் மலக்குடல், ஆசனவாய் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். நீளமான மலக்குடல் பகுதி-ஆசன வாயில் பிரச்னை ஏற்பட்டால் முதலில் வலி, பாதிப்பு தீவிரமடையும் நிலையில் ஆசனவாயிலிருந்து ரத்தம் கசிதல் ஆகிய விளைவுகள் ஏற்படும். காலைக் கடனைக் கழிப்பதிலும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.
ரத்தம் வெளியேறினாலே...பெரும்பாலானோருக்கு மலக் குடலிலிருந்து ஆசன வாயில் ரத்தம் வெளியேறுவது வழக்கம். மொத்தம் 12 செ.மீ. நீளமுள்ள மலக்குடல் பகுதி, ஆசனவாய் என எந்தப் பகுதியில் பாதிப்பு இருந்தாலும் ரத்தம் வெளியேற வாய்ப்பு உண்டு. ஆனால், வலியுடன் ரத்தம் வெளியேறும் நிலையில், "மூல நோய்' ஏற்பட்டுள்ளதாக பெரும்பாலான நோயாளிகள் தாங்களாகவே கருதுகின்றனர். இது தவறானது.
காரணம் என்ன? ஏனெனில் மூல நோய் காரணமாக ஆசனவாய் வழியாக வெளியேறும் ரத்தம், கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும் மூல நோய் காரணமாக ரத்தம் வெளியேறும் நிலையில் பெரும்பாலும் வலி இருக்காது. கருப்பு நிறமாக ரத்தம் இருந்தாலோ அல்லது மலத்துடன் கலந்து ரத்தம் வெளியேறினாலோ, மலக்குடல் பகுதியிலிருந்து ரத்தம் வெளியேறுகிறதா என மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆசனவாயில் வலி: ஆசனவாயில் வலி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். மலம் கழிக்கும்போது ஆசனவாயில் வலி அதிகமாகும்; ரத்தமும் கலந்து வெளியேறும். இத்தகைய நிலையில் மருத்துவப் பரிசோதனை செய்து காரணத்தை முழுமையாகக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். மலச்சிக்கல் பிரச்னை உள்ளோருக்கு மூல நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சிறப்பு மையம்: பெருங்குடல், பெருங்குடலுடன் தொடர்புடைய நீளமான மலக்குடல் பகுதி, ஆசனவாய் என எந்தப் பகுதியில் பாதிப்பு இருந்தாலும் சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியும்.
மூல நோய், மலக்குடலில் ரத்தம் கசிதல், ஆசனவாயில் வலி, ஆசனவாயில் அரிப்பு, ஆசனவாயில் வெடிப்பு, குடலிறக்கம், மலக்குடல், பெருங்குடல் பகுதியில் புற்றுநோய், மலச்சிக்கல், வயிற்றுப் பகுதியில் கட்டி, வயிற்றுப் போக்கு மற்றும் அது கட்டுப்படாத நிலை போன்றவற்றுக்கு சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியும்.
இத்தகைய பெருங்குடல் பிரச்னைகள் அனைத்துக்கும் தரமான சிகிச்சை அளிக்க சென்னைஅண்ணா நகரில் சிறப்பு மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் தலைமையில் இந்தச் சிறப்பு மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது,
லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மருத்துவமனைகளில் பயிற்சி பெற்று பின்னர் ஆராய்ச்சி மேற்கொண்ட இவர், இங்கிலாந்து ராயல் அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் கல்லூரியின் நிபுணர் சான்றிதழும் பெற்றவர். இவர் லாப்ராஸ்கோப்பி சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.