உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி சீராக்க வல்லது அக்குபஞ்சர். நமது உடல் முழுவதும் பிராண சக்தி ஒட்டம் காணப்படுகிறது. அதன் ஓட்டத்தில் ஏற்படும் எந்தத் தடையும் உடலுக்கும் மனத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடும்.
அண்மைக் காலமாக மாற்று மருத்துவ முறைகளில் அக்குபஞ்சர் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. "கன்ஜெக்டிவிட்டி' எனும் கண் சிவப்பாகி வீங்குதல், கிட்டப்பார்வை, கண் புரை, பல் வலி, சில நரம்பு மண்டலக் கோளாறுகள், தசை இறுக்கம், இறுகிப் போன மூட்டுகள், டென்னிஸ் வளைவு, தண்டுவட நரம்புகளில் அழுத்தம் எலும்புத் தேய்மானம் போன்றவற்றுக்கு அக்குபஞ்சர் நல்ல பலனைத்
தருகிறது. சாதாரண ஜுரம், சளி, தொற்றுகள், ஃபுளு போன்ற வைரஸ் காய்ச்சல் போன்றவற்றுக்கும் மன அழுத்தம், பரபரப்பு, மன உளைச்சல் போன்றவற்றுக்கும் நிவாரணம் தருவதாக உள்ளது.
வருமுன் காக்கும் மருத்துவமாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.