கண் புரை என்பது கண்ணில் உள்ள பார்வைக்கான லென்ஸின் மீது ஏற்படும் ஒரு திரையாகும். இது பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படும் நோயாகும். இதனால் வலி எதுவும் ஏற்படாது. லென்ஸை மெல்ல இந்த புரை எனப்படும் திரை மறைப்பதால் கண் பார்வை மங்கும்.
இந்தியாவில் பெரும்பாலான வயோதிகர்களுக்கு கண் புரை நோய் இருக்கிறது. இது ஒரு பரம்பரை வியாதியாகவும் உள்ளது.
இதற்கான அறிகுறிகள்
பார்வை மங்குதல்
கண் கூச்சம்
கண்ணிற்கு முன்பு கரும் புள்ளிகள் தெரிவதைப் போன்ற தோற்றம்
இரட்டை பிம்பம், பூதாகரமான தோற்றம்
நிறங்களின் அடர்த்தியை அறிந்து கொள்ள இயலாமை
வெள்ளை நிற மனிதர்களின் முகங்கள் சரியாக தெரியாமல் போவது
வாகனம் ஓட்டுதல், புத்தகம் படித்தல் போன்றவை கடினமாவது
இரவில் கண் பார்வை அதிகமாக குறைவது போன்றவை கண் புரை நோயின் அறிகுறிகளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.