வாழ்க்கையை சிக்கலாக்கும் 4 விஷயங்கள்

பொதுவாக நாம் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து சிலவற்றை அழகாக தீர்த்து வைத்திருப்போம். சிலவற்றில் சிக்கி மீள முடியாமல் தவித்திருப்போம். ஆனால் எல்லாமே கடந்த பிறகு நல்ல அனுபவமாக அமைந்து விடுகிறது.இவை எல்ல
Updated on
2 min read

பொதுவாக நாம் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து சிலவற்றை அழகாக தீர்த்து வைத்திருப்போம். சிலவற்றில் சிக்கி மீள முடியாமல் தவித்திருப்போம். ஆனால் எல்லாமே கடந்த பிறகு நல்ல அனுபவமாக அமைந்து விடுகிறது.இவை எல்லாம் நாம் நலமாக இருந்தால் மட்டுமே கிடைக்கும் விஷயங்களாகும். இல்லை என்றால், சிறிய விஷயங்கள் கூட மலை போல் நம்மை மிரட்டக் கூடும். பொதுவாக 40 அல்லது 50 வயதாகும் நபர்களை பாதிக்கும் 4 விஷயங்களை இங்கே காண்போம்.

மூட்டு வலி

முன்பெல்லாம் நமது மூதாதையர் 70 வயதில் கூட கம்பீரமாக நடந்து சென்றதை பார்த்த நாம், தற்போது 30 வயதிலேயே படிகட்டுகள் ஏற படாதபாடு படுகிறோம். இந்த நிலைக்கு நமது உணவுப் பழக்க வழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள்தான் காரணம் என்று நமக்குத் தெரியும். ஆனால் இவை எதையும் மாற்றக்கூடிய நிலையில் நாம் இல்லை.

எனவே, மூட்டு வலியில் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்ற விஷயங்களை மட்டுமே பார்க்க வேண்டும். முதலில் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக உடல் எடையே மூட்டுக்களில் அதிக வலியை ஏற்படுத்தி விடுகிறது. உட்காருதல், எழுந்திருப்பது, நடப்பது போன்ற காரியங்களை கடினமாக்குகிறது. எனவே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.

மேலும், அவரவருக்கு ஏற்ற வகையிலான சிறிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். ஆரம்ப நிலையிலேயே ஏற்படும் மூட்டு வலிகளை தவிர்க்க உடனடி சிகிச்சை பெறுதலும், அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியம்.



கீழே விழுதல்

இங்கு சம்பந்தமே இல்லாமல் கீழே விழுவது எங்கிருந்து வந்தது என்று நீங்கள் கருதலாம். ஆனால், 50 வயதுக்கு மேற்பட்ட நல்ல ஆரோக்கியமானவர்களைக் கூட ஆபத்தில் சிக்க வைப்பது கீழே விழுவதுதான்.

சாதாரணமாக நடக்கும் போது தடுக்கி அல்லது வழுக்கி விழுவதால் ஏற்படும் இடுப்பு, கை, கால் எலும்பு உடைதல் போன்றவை பலரையும் படுத்த படுக்கையாக்கி விடுகிறது. வயது முதுமை காரணமாக எலும்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது கடினமாகும்.  எனவே, 50 வயதை எட்டும் நபர்கள் இருக்கும் வீடுகளை அதிக மொசைக் போடுவது, குளியறைலகள் முழுவதும் மொசைக் போன்றவை போடாமல் இருக்கலாம். நடக்கும் போது எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.

நினைவுத்திறன் பாதிப்பு

வயதாகும் போது முதலில் நம்மை தாக்குவது நினைவுத்திறன் பாதிப்புத்தான். சிலருக்கு இது அதிகமாக இருக்கும். இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். இதனை எளிதாக நாம் வெல்ல முடியும். எப்போதுமே பயன்படுத்தாத பொருட்கள்தான் கெட்டுப்போகும் என்பதைப் போல, நமது மூளையை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டே இருந்தால் நினைவுத்திறன் பாதிப்பு நம்மை நெருங்காது. நெருங்கிய உறவினர்களின் தொலைபேசி எண்களை மனதில் பதிய வைத்துக் கொள்வது, தினந்தோறும் செய்தித்தாள் படிப்பது போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள. இதனால் உங்களது மூளைத்திறன் அதிகரிக்கும். நினைவுத்திறன் பாதிக்காது.



கண் பார்வை, காது கேட்பது குறைதல்

வயதாகத் துவங்கும் போது அதை அறிவுறுத்தும் வகையில் நமக்கு கண் பார்வை குறைகிறது. இந்த சமயத்தில் நாம் துரிதமாக சிகிச்சை மேற்கொண்டு கண்ணுக்கு கண்ணாடி அணிவதோ அல்லது அதற்கான சிகிச்சை பெறுவதோ உங்களது இயல்பு வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

காது கேளாமை என்பது மரபணு ரீதியாக வரும் குறைபாடாகும். இதையும்  போக்க சில யோகா பயிற்சிகள் உள்ளன. அவற்றை சிறந்த முறையில் செய்து காது கேளாமையை தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com