உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு இந்த ஆண்டும் தொடர்ந்து சர்க்கரை நோய் குறித்த கல்வி மற்றும் நோய்த் தடுப்புக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
சர்க்கரை நோய் வராமல் தடுத்துக் கொள்வதே சிறந்தது. எனினும் சர்க்கரை நோய் ஏற்பட்டிருப்பது உறுதியானால், மருத்துவ ஆலோசனை-சிகிச்சை வசதிகள் அனைத்தும் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதே நல்லது.
சென்னை ராயபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எம்.வி. சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனை அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. சென்னையில் மயிலாப்பூர், பெருங்குடியிலும் இந்த மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் இப்போது கிளைகள் உள்ளன. சர்க்கரை நோய்க்கான ஆராய்ச்சிக்கு எம்.வி. சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையை உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) அங்கீகரித்துள்ளது. இந்த மையத்தில் சர்க்கரை நோய் குறித்த கல்வி மற்றும் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.
சர்க்கரை நோய் காரணமாக பாதிக்கப்படும் இதயம், கண், கால், பல் போன்றவற்றுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. உணவு முறை குறித்த ஆலோசனைகள், மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. உடல் பருமன், யோகா சிகிச்சைகளும் இங்கு உண்டு. என்ஏபிஎல் அங்கீகரித்துள்ள அதிநவீன சோதனைக் கூடம், எம்.வி. மருத்துவமனையின் சிறப்பு அம்சமாகும்.
மேலும் விவரங்களுக்கு...
எம்.வி. சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனை,மயிலாப்பூர், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.