பெருங்குடல் புற்று நோய்க்கு காரணம்

ஆண், பெண் இரு பாலருக்கும் பெருங்குடல், மலக்குடல் பகுதிகளில் புற்றுநோய் வரலாம்.
Updated on
1 min read

ஆண், பெண் இரு பாலருக்கும் பெருங்குடல், மலக்குடல் பகுதிகளில் புற்றுநோய் வரலாம். கடந்த 2008ம் ஆண்டில் மட்டும் சுமார் 12 லட்சம் மக்களுக்கு இந்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், நவீன வாழ்க்கை முறை, மது, புகை பிடித்தல், உடல் பருமன், குறைவான உடல் உழைப்பு, உடற் பயிற்சியின்மை, தொடர்ந்து அதிக அளவு அசைவ உணவு சாப்பிடுதல் போன்றவை புற்று நோய் வருவதற்குக் காரணங்களாக உள்ளன.

பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து மிகுந்த உணவுகள், தானியங்கள், சிறு தானியங்கள், உணவு, பயறு வகைகள் சாப்பிடுவது, கால்ஷியச் சத்து நிறைந்த பால், கொழுப்பு குறைந்த உணவு ஆகியவற்றில் மக்கள் போதிய அக்கறை செலுத்தாமல் இருப்பதும் காரணம்.

மக்கள் தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை அவ்வப்போது கவனித்து, அதற்கு ஏற்றவாறு தகுந்த சிகிச்சை செய்வதன் மூலம் பெருங்குடலில் புற்று ஏற்படாமல் தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com