தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொள்கிறதா?

சிலர் தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொண்டு அவதிபடுவதுண்டு. ஆண்களை விட பெண்களே இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொள்கிறதா?
Updated on
1 min read

சிலர் தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொண்டு அவதிபடுவதுண்டு. ஆண்களை விட பெண்களே இந்த பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இன்றைய அவசரக் காலக்கட்டத்தில் பெண்கள் தலைக்கு குளித்துவிட்டு, துவட்டுவதோ, காய வைப்பதோ கிடையாது. நாளடைவில் தலையில் நீர் சேர்ந்து தலைவலி, பின் மன்டையில் வலி, தும்பல் என பல பிரச்னைகளை ஏற்படுத்துகின்றது.

இந்த பிரச்னையை தவிர்க்க தலைக்கு குளித்ததும் 5 நிமிடங்களாவது நேரம் ஒதுக்கி காய வைக்கலாம். அவ்வாறு காய வைத்தும் தலையில் நீர் கோர்த்து கொண்டிருந்தால் கொதிக்கும் நீரில் நுணா இலை, நொச்சி இலை, எருக்கம் இலை போட்டு வேது (ஆவி) பிடிக்கலாம்.

அதிலும் சரியாகவில்லையெனில் கொதிக்கும் நீரில் செங்கல் போட்டு, அந்த ஆவியை நன்கு முகர்ந்து உள்ளிழுக்கலாம் அல்லது நீட்டு மஞ்சள் தீயில் காண்பித்து முகரலாம். இவ்வாறு மாதம் மூன்று முறை செய்துவர தலையில் நீர் கோர்க்கும் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

சில பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னையை, இரவில் தூங்கும் போது நினைத்து அழுவும் பழக்கம் கொண்டவராக இருப்பர். இவ்வாறு அழும் போது மன அழுத்தம் ஏற்பட்டு கண்ணில் இருந்து வரும் கண்ணீர் தலையில் கோர்த்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது. எனவே தூங்கும் போது பிரச்னைகளை நினைத்து அழுவது, மூளைக்கு தேவையில்லாது அழுத்தம் கொடுப்பதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com