தலைவலி, ரத்த அழுத்தம், தைராய்டு, முகப்பரு ஆகிய அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு!

முட்டைக்கோஸ் நமது உடலுக்கு நம்பமுடியாத பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது, மேலும் வியக்க வைக்கும் பல மருத்துவ குணங்களை பெற்றிருக்கும் ஒரு காய்கறி.
தலைவலி, ரத்த அழுத்தம், தைராய்டு, முகப்பரு ஆகிய அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு!

முட்டைக்கோஸ் நமது உடலுக்கு நம்பமுடியாத பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியது, மேலும் வியக்க வைக்கும் பல மருத்துவ குணங்களை பெற்றிருக்கும் ஒரு காய்கறி.

ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருக்கும் முட்டைக்கோஸை வைத்து பல்வேறு சுகாதார பிரச்சனைகளைக் கூட சரி செய்யலாம். மேலும் முட்டைக்கோஸை நம் தோலின் மீது சிறிது நேரம் வைத்தால் காந்தம் போல் செயல்பட்டு பல நோய் காரணிகளை உடல் வழியாக ஈர்த்து வெளியேற்றக் கூடியது.
 
முட்டைக்கோஸில் உள்ள 7 சிறந்த நன்மைகள்:

தலைவலியில் இருந்து விடுதலை:

பொதுவாகச் சோர்வு காரணமாகவும் தேவையற்ற பதற்றங்களாலுமே தலைவலி ஏற்படுகிறது. படாத பாடு படுத்தும் இந்தத் தலைவலியில் இருந்து விடுப்பெற மிகச் சுலபமான வழி, முட்டைக்கோஸை உரித்து அதன் தோலை சிறிது நேரம் உங்கள் புருவத்தின் மீது வைத்தால் போதும் தலைவலி உடனே குணமாகிவிடும்.

ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க:

முட்டைக்கோஸ் ரத்த நாளங்களை சுத்திகரிக்கக் கூடியது. இதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்பமுடியாத அளவில் ரத்தத்தில் இருக்கும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுத்தன்மையைக் காந்தம் போல் ஈர்த்து தூய்மையான ரத்தத்தை உடலெங்கும் பாய செய்யும்.

வீக்கத்தைக் குறைக்கும்:

கை, கால்களில் சுளுக்கு காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காயங்களால் வீக்கம் ஏற்பட்டால் ஒரே இரவில் முட்டைக்கோஸின் உதவியோடு அதைக் குறைத்துவிடலாம். ஈரப்பதம் கொண்ட முட்டைக்கோஸ் இலை ஒன்றை வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்தின் மேல் வைத்து இலை நகராதவாறு நன்கு அழுத்திக் கட்ட வேண்டும். அடுத்த நாள் காலை கட்டை அவிழ்த்தால் வீக்கம் கரைந்ததோடு வலியும் குறைந்திருக்கும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்:

முட்டைக்கோஸை தொடர்ச்சியாக உங்கள் உணவோடு சேர்த்து சாப்பிட்டால் ரத்த அழுத்தமானது தீரும். கோஸில் இருக்கும் புரதச்சத்து ரத்த நாளங்களைச் சீர் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இதனால் ரத்த அழுத்தமானது குறையும் என்று விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.

தாய்ப்பால் கொடுப்பதால் வரும் வலி நிவாரணி:

தாய்ப்பால் கொடுக்கும் பல பெண்கள் வலி காரணமாக மிகுந்த வேதனைகளுக்கு உள்ளவர்கள். ஆனால், முட்டைக்கோஸின் சாதாரண இலையை வைத்து இந்த வலியைக் குறைத்துவிடலாம். வலி பொறுக்கமுடியாத நிலைக்குச் செல்வதற்கு முன்பாகவே இந்த இலைகளை மார்பகத்தின் மீது வைத்து ஒத்தடம் கொடுத்தால் போதும்.

தோலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்:

வைட்டமின் சி அதிகமாகவுள்ள முட்டைக்கோஸ் முகப்பரு, தோல் தடித்தல், புண்கள், சுருக்கங்கள் போன்ற பல தோல் பிரச்சனைகளைத் தீர்க்கவல்லது. பிரச்சனை உள்ள இடத்தின் கோ இலையை சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு வைத்தால் போதும் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தோலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

தைராய்டு பிரச்சனையைக் குணப்படுத்தும்:

தைராய்டு சுரப்பி அமைந்துள்ள தொண்டையின் மேல் சில முட்டைக்கோஸ் இலையினை வைத்து நகராதவாறு கட்டிவிட வேண்டும், இரவு முழுவதும் தொண்டையின் மேல் இருக்கும் இந்த இலைகள் தைராய்டு ஏற்படக் காரணமாய் இருக்கும் நச்சை வெளியேற்றிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com