அத்தியாயம்-21. நோய் எதிர்க்கும் போர்வீரர்கள்

உணவு, நோய், நோய் எதிர்ப்பு சக்தி, இந்த மூன்றுமே ஒன்றை ஒன்று சார்ந்து தான் இருக்கும். உடம்பில் தொற்று (இன்ஃபெக்‌ஷன்) உடனே தாக்கும் (காரணம் நோய் எதிர்ப்புத் தன்மை குறைவதால்).
அத்தியாயம்-21. நோய் எதிர்க்கும் போர்வீரர்கள்
Published on
Updated on
2 min read

உணவு, நோய், நோய் எதிர்ப்பு சக்தி, இந்த மூன்றுமே ஒன்றை ஒன்று சார்ந்து தான் இருக்கும். உடம்பில் தொற்று (இன்ஃபெக்‌ஷன்) உடனே தாக்கும் (காரணம் நோய் எதிர்ப்புத் தன்மை குறைவதால்).

நோய் எதிர்ப்புத்தன்மை இரண்டு வகைப்படும். ஒன்று சுற்றுப்புற சூழ்நிலையை பழகிக் கொள்வதால் ஏற்படும் நோய் எதிர்ப்புத்தன்மை, மற்றொன்று நாம் உண்ணும் உணவால் ஏற்படும் நோய் எதிர்ப்புத்தன்மை.

நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்க மிக முக்கியமான ஊட்டச்சத்து புரதம். இந்தப் புரதச் சத்து அதிகமாக காணப்படும் உணவு வகைகள் பால், பாலைச் சார்ந்த உனவு பொருட்களான தயிர், மோர், ஆகியவை முட்டை, பருப்பு, கொட்டை வகைகள். ஒரு நாட்டை எதிரிகள் தாக்கும் போது காக்க வரும் படை வீரர்கள் போல, நோய் உடம்பை தாக்கும் போது அந்த நோயிலிருந்து நம்மை காப்பாற்ற ஆன்டிபயாடிக்ஸ் என்ற போர் வீரர்கள் தயாராகுகின்றன. இந்த ஆன்டிபாடீஸ் உற்பத்தி ஆவதற்கு புரதச்சத்து மிகவும் இன்றியமையாதது. புரதக் குறைபாடு இருந்தால் ஆன்டிபாடிஸ் குறைபாடு ஏற்படும். நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்துவிடும். போதிய அளவு மாவுச்சத்தும், கொழுப்புச் சத்தும் உணவு மூலம் கிடைக்காவிட்டால் புரதச் சத்து சக்தி (energy) கொடுப்பதற்கு பயன்படுத்தப்படுமே தவிர ஆன்டிபாடிஸ் உற்பத்திக்கு அது போதுமான அளவு கிடைக்காமல் போய்விடும். அதனால் உட்கொள்கின்ற உணவு எல்லா சத்துகளும் கூடிய சமச்சீர் உணவாக இருக்க வேண்டும்.

குழந்தை பிறந்தவுடன் சில மணி நேரத்திற்குள் உற்பத்தி ஆகும் தாய்பாலில் அதிக அளவு நோய் எதிர்ப்புக்கான ஆன்டிபாடீஸ் காணப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு இந்தப் பாலை ஊட்டுவதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும்.

நோய் வளரும் குழந்தைகளை மட்டுமல்லாமல் கருவுற்ற தாய்மார்கள், வயதானவர்கள் மற்றும் மன அழுத்தம் உடையவர்களை அதிக அளவில் பாதிக்கும். எனவே நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்க சில வழிகளை இங்கே காணலாம்.

காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் கிடைக்கின்ற உயிர்சத்துகள் மற்றும் உப்புச்சத்துக்கள் நோய் எதிர்ப்புத்தன்மையை பெருக்கும். இது மட்டுமன்றி காய்கறிகளிலும், பழங்களிலும் பரவலாக காணப்படுகின்ற antioxidants உடம்பில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும். உடம்பில் தொடர்ந்து வேலைப்பாடுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. நம் உடல் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் சில அடிப்படை வேலைகள் (குறிப்பாக இதய துடிப்பு, சுவாசம் ஆகியவை) நடந்து கொண்டே இருக்கின்றன. இதன் விளைவாக free radicals என்கிற நச்சுப் பொருட்கள் உற்பத்தி ஆகி உடலில் தங்கி விடும். தங்கி விடுவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான திசுக்களை தாக்கி அழித்து விடும். இந்த free radicals என்கிற நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதற்கு antioxidants பெரிதும் உதவி செய்கிறது. Antioxidants காய்கறி, பழங்கள் மூலம் தான் நமக்கு கிடைக்கிறது. இதை வெறும் சப்ளிமெண்ட் அல்லது மாத்திரை மூலம் எடுத்துக் கொண்டல் அது செயல்பட வேண்டிய விதத்தில் செயல்பட்டு பயன் தராது. உதாரணத்துக்கு ஒரு பழத்தை எடுத்துக் கொள்வோம். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் சி உடம்புக்கு ஆரோக்கியம் தரும் என்ற செய்தி நமக்குப் புதிதல்ல ஆனால் ஆரஞ்சு சுளையில் இந்த வைட்டமின் சியுடன் Bioflavonoid என்ற வேதிப்பொருளையும் வைட்டமின் சியுடன் உட்கொள்வதால் தான் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது. அது மட்டுமல்ல வைட்டமின் சியும் அதனுடைய முழுமையான செயல்பாட்டுத்திறனை இழக்காமல் பயன் தருகிறது.

நோய் எதிர்ப்புத்தன்மை, உடற்பயிற்சி செய்வதால் அதிகரிக்கும். முக்கியமாக குழந்தைகளை தினமும் இரண்டு மணி நேரமாவது விளையாட விட வேண்டும். விளையாடும் இடம் நல்ல வெளிச்சம் மற்றும் காற்று உள்ளதாக இருக்க வேண்டும்.

மன அழுத்தம், தூக்கமின்மை ஆகியவை நோய் எதிர்ப்புத்தன்மையை குறைத்துவிடும். மிதமான உணவு, வேலை, உடற்பயிற்சி, தூக்கம் இதுவே நோய் எதிர்க்கும் போர் வீரர்களுடைய நெருங்கிய நண்பர்கள்.

தொடர்புக்கு - அருணா ஷ்யாம் : 9884172289

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com