19. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது

‘நல்லதோர் வீணை செய்து, அதை நலம் கெடப் புழுதியில் எறியலாமோ’ – எனும் மகாகவி பாரதியாரின் பாடலின் படி இறைவன், மனிதன் எனும் நல்லதோர் வீணை செய்ததை, அதை நாம் நலம் கெடப் புழுதியில் எறியலாமோ!
19. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது
Published on
Updated on
2 min read

‘நல்லதோர் வீணை செய்து, அதை நலம் கெடப் புழுதியில் எறியலாமோ’ – எனும் மகாகவி பாரதியாரின் பாடலின் படி இறைவன், மனிதன் எனும் நல்லதோர் வீணை செய்ததை, அதை நாம் நலம் கெடப் புழுதியில் எறியலாமோ!

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது

கொடிது கொடிது சமைத்துண்பது கொடிது’

ஆம்; சமைத்துண்பது கொடிது. செயலே என மேல் நாட்டறிஞர் அன்றே கூறியுள்ளார்.

உலகில் பல்லாயிரமாண்டுகளாக, இயற்கை சூரிய வெப்பத்தால் சமைத்து வழங்கிய உணவை, நெருப்பில் சமைத்து, உயிரைக் கொன்று உண்ணும் ஒரே உயிரனம் மனிதன் தான். பிறத்தலரிதான மானிடப் பிறவியில் பிறந்துள்ள நாம், நெருப்பில் வெந்த உணவை உண்டு, இப்பிறவியைப் பாழாக்கி, புழுதியில் எறிந்து வருகிறோம்.

சமையலறைக்கு, ‘அடுக்களை’ எனும் தமிழ்ச்சொல்லும் உண்டு. ‘அடு’ என்றால் கொலை; களம் என்றால் அறை. களம் என்ற சொல் தான் நாளைடைவில், ‘களை’ என மருவியிருக்கலாம். எனவே, ‘அடுக்களை’ எனும் சொல்லை, ‘அடுக்களாம்’ எனக் கொண்டால், ‘கொலை அறை’ எனப் பொருள் கொள்ளலாம்.

உயிருள்ள இயற்கை படைத்த இயற்கை உணவை, கொலை செய்யும் அறையான அடுக்களம் எனும் சமையலறையில் கொதிக்கும் நீர் விட்டு பிணமாக்கி, இறந்த உணவே சமையல் உணவு. இத்தகைய பிணமான இறந்த உணவான சமையல் உணவை நாம் உண்ணப் பழகியதால், நமது செல்கள் இறந்து, உடல் செயலற்று இறந்து, உயிரும் இறந்து விடுகிறது.

‘ஒரு சாண் வயிறே இல்லாட்டா

இந்த உலகத்தில் ஏது கலாட்டா?

சமையல் உணவே இல்லாட்டா,

இந்த உலகத்திலேது கலாட்டா

சங்கடமான சமையலை விட்டு

சங்கீதம் பாடப் போகிறேன்!’

கிடைத்தற்கு அரிய இம்மானிடப் பிறவியை சமைத்து உண்டு கெடுப்பதை விட, சமைக்காத இயற்கை உணவு உண்டு பிறவிப் பேறு பெறுவது உயர்வல்லவா? அவ்வாறு இப்பிறவியிலேயே இயற்கை உணவு உண்டு, மாமனித நிலை, இறை மனித நிலை எய்தி பிறவிப் பேறு பெறுவது இறைச் செயல் அல்லவா?

‘கொடிது கொடிது கூன் குருடு செவிடாய்ப்

பிறப்பது கொடிது

இளமையில் வறுமை கொடிது’

சமைத்துண்டு வாழும் மானிடப் பிறவியில் தான் கூன், குருடு செவிடு என உடல் ஊனமுற்ற பிறவியைப் பார்க்கின்றோம். பரம்பரையாக இயற்கையுணவு உண்டு வாழும், மனிதப்பிறவியைத் தவிர்த்த, இதர பிறவிகளில் கூன், குருடு, செவிடு மற்றும் எத்தகைய உடல் ஊனமும் இல்லையே!

கேடுகள் நிறைந்த சமையல் உணவைத் தவிர்த்து, இன்னலற்ற இயற்கை உணவில் வாழ்ந்து, பிறத்தற்கரிய மானிடப் பிறவியைப் போற்றுவோம்! இயற்கை உணவில் வாழ்ந்து மானிடப் பிறவியைக் கெடுக்கும் காபி, டீ அருந்துதல், புகை பிடித்தல், மது அருந்துதல், புலால் உண்ணுதல், மருந்துகள் உண்ணுதல், மருந்துவத்திற்கு ஆட்படுதல், கொலை, களவு செய்தல், பாலியல் பலாத்காரம் செய்தல், நம்பிக்கை மோசம் புரிதல், மற்றும் பிற தீங்கு செயல்களைத் தவிர்ப்போம்.

ஆன்மிகம் எனும் பெயரில் திருவிழாக்கள் நடத்தி பொருள் விரயம், சக்தி விரயம் செய்தல், புதிது புதிதாக ஆலயங்கள் கட்டுதல், மதச் சடங்குகள் நடத்துதல் ஆகியனவும் தவிர்த்து, இயற்கையைப் போற்றுவோம். இயற்கை வழி நடப்போம். வாழ்வோம். இயற்கை நெறியே இறைநெறி என ஏற்போம். இயற்கைக்கு மாறான செயல்கள் செய்வதைத் தவிர்ப்போம். இயற்கையோடு இயைந்து வாழ்வோம். இயற்கையை மீறாமல் இருப்போம். ஊனுடம்பு ஆலயம் எனும் திருமூலர் வாக்கைப் போற்றி மதித்து வாழ்வோம்.

வேதியல் கலந்த உணவை உண்ண வேண்டாம். வேதியல் கலந்த பானம் பருக வேண்டாம். புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவையும், பானத்தையும் உண்ணவும் வேண்டாம், அருந்தவும் வேண்டாம்.

தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com