புதுகையில் புற்றுநோய் கண்டறியும் 'ஸ்கிரீனிங் சென்டர்' அமைக்க முயற்சி

புதுக்கோட்டையில் புற்றுநோய் குறித்து அறிவதற்கான நுண்சோதனை மையம் (ஸ்கிரீனிங் சென்டர்)
புதுகையில் புற்றுநோய் கண்டறியும் 'ஸ்கிரீனிங் சென்டர்' அமைக்க முயற்சி

புதுக்கோட்டையில் புற்றுநோய் குறித்து அறிவதற்கான நுண்சோதனை மையம் (ஸ்கிரீனிங் சென்டர்) நிறுவும் முயற்சி நடைபெறுவதாக புதுகை திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை,  

புதுக்கோட்டை மண்ணில் பிறந்த, நாட்டின் முதல் பெண் மருத்துவராகத் திகழ்ந்த பத்மபூஷண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரால் நிறுவப்பெற்று மருத்துவப் பணியை குறிப்பாக புற்றுநோய்க்கான சிறந்த மருத்துவமனையாக விளங்கும் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையின் வழிகாட்டுதலோடு புதுக்கோட்டையில் புற்றுநோய் தணிக்கை மையம் அமைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை செயல் தலைவி டாக்டர் சாந்தா அம்மையாரை  ஆகஸ்டு 9-ம் தேதி அன்று அடையாறு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையில் பெண்களில் மூன்றில் ஒரு பங்குள்ள சுமார் 3 லட்சத்துக்கும் மேல்பட்டோருக்கு பரிசோதனை செய்வது சாத்தியமாகும் எனவும், அவ்வகையிலும் சுற்றுப்புற மாவட்ட மக்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருப்பதால்  இந்த புற்றுநோய் நுண் சோதனை மையத்தை (ஸ்கிரீனிங் சென்டர்) மக்களுக்காக இலவசமாக நடத்திட முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும், நிகழாண்டின் இறுதிக்குள் அதை நிறுவி செயல்பாட்டுக்குக்  கொண்டு வர புதுக்கோட்டை மருத்துவர்கள், மருத்துவத் துறை சார்ந்த  சமூக ஆர்வலர்கள், சமூக நலச் சேவை பெண்கள், ரோட்டரி, லயன்ஸ் போன்ற சேவை அமைப்புகளின் உதவியோடு இம் மையத்தை இயக்குவது, கொடுமையான புற்று நோயை ஒழித்திடவும்,  சுற்றுப்புற மாவட்டத்திலும் இந்நோய் இல்லாதவாறு உருவாக்கப் பாடுபடுவதெனவும் ஆலோசனையின்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com