

தமிழகத்தில் இதுவரை 1.5 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்டம் தொடர்பாக தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாக பேரவையில் திமுக உறுப்பினர் பூங்கோதை அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
தமிழகத்தில் மொத்தம் 1.76 கோடி குழந்தைகளுக்கு போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1.5 கோடி பேருக்கு இதுவரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மார்ச் 16 -ஆம் தேதி முதல், விடுபட்ட குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் தேவைக்கேற்ப சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, இந்திய குழந்தைகள் மருத்துவச் சங்க மருத்துவர்களால் நடத்தப்படும் மருத்துவமனைகளிலும் மார்ச் 31 -ஆம் தேதி வரை இந்தத் தடுப்பூசி போடப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.