ஆன்லைனில் இலவசமாக ஆணுறைகள் பெற்ற நெட்டிசன்கள்!

இந்துஸ்தான் லேட்ஸ் லிமிடெட் (HLL) நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக ஆணுறைகளை வழங்கும்
ஆன்லைனில் இலவசமாக ஆணுறைகள் பெற்ற நெட்டிசன்கள்!
Updated on
1 min read

இந்துஸ்தான் லேட்ஸ் லிமிடெட் (HLL) நிறுவனத்துடன் இணைந்து எய்ட்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் (AIDS Healthcare Foundation (AHF) இலவசமாக ஆணுறைகளை வழங்கும் ஆன்லைன் விற்பனையகத்தை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11-தேதி தொடங்கியது. உலகில் ஆன்லைனில் இலவச ஆணுறை வழங்கும் முதல் நாடாக இந்தியா உள்ளது. இந்த ஆணுறைகளுக்கு லவ் காண்டம் என்ற பெயரும் வைக்கப்பட்டது.

மக்கள் தொகை கட்டுப்பாடு, எய்ட்ஸ் போன்ற பிரச்னைகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் பயன்பட்டுவரும் ஆணுறையை ஆன்லைன் மூலம் இலவசமாக இனி வாங்க முடியும் என்ற தகவல் கிடைத்தபின் நெட்டிசன்கள் பலர் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தினர். காரணம் இந்த விற்பனையகம் திறக்கப்பட்ட 70 நாட்களில் சுமார் பத்து லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தனி நபர்கள் மட்டும் நான்கு லட்சத்துக்கு மேலானவர்கள் வாங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் டிசம்பர் மாதம் வரை நீடிக்கவிருந்த இந்த திட்டம், ஜூலைக்குள் முடிவடைந்தவிட்டதால் இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் விரைவில் இது மீண்டும் தொடங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் விபரங்களைப் பெற 1800 102 8102 என்ற இலவச எண்ணுக்கு அழைக்கலாம். அல்லது freecondomstoreahf@gmail.com இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com