
தினமும் உணவில் சின்ன வெங்காயமும், வேக வைத்த பூண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ரத்தக் கொதிப்பு நோயாளிகள் தினமும் கிரீன் டீ அருந்துவது நல்ல பலனளிக்கும்.
தினசரி உணவில் மஞ்சள் தூள், லவங்கப்பட்டை சேர்த்து வர இதயத்திற்கு பலம் சேர்க்கும்.
மதியம் சாப்பிடும்போது சுடு சோற்றில் முதல் உருண்டை கறிவேப்பிலைப் பொடி, வெந்தயத்தூள் கலந்து சாப்பிட்டு வர ரத்தக் கொதிப்பு கட்டுப்படும்.
ரத்தக் கொதிப்பு மற்றும் இரத்தக் கொழுப்பைக் குறைக்க உணவில் கொடம் புளி பயன்படுத்தலாம்.
மதிய உணவோடு தினமும் சாம்பார் வெங்காயம் சேர்த்த தயிர் பச்சடி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, வாழைத்தண்டு தயிர் பச்சடி உண்டு வர ரத்தக் கொதிப்பு கட்டுப்படும்.
மிளகுத் தூள், பூண்டு, சின்ன வெங்காயம், வெந்தயம் சேர்த்து முருங்கைக் கீரை சூப் காலை உணவுடன் எடுத்து வர ரத்தக் கொதிப்பு குறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.