மைக்ரோவேவ் சமையலின் நன்மைகள்
இந்தச் சமையலில் உணவிலுள்ள வைட்டமின்களும், தாதுப்பொருள்களும் நஷ்டமடையாமல் அப்படியே இருக்கின்றன. முக்கியமாக ருசி மாறாமல் இருக்கின்றன.
மைக்ரோவேவில் சமைக்கும் போது காய்கறிகளின் நிறம் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.
மைக்ரோவேவ் அவனை சமையலுக்கு பயன்படுத்தினால் மிக்க குறைந்த மின்சாரமே உபயோகிக்கப்படும்.
5 நிமிடங்களுக்குள் ஏறக்குறைய 500 கிராம் கேக் தயார் செய்து விடலாம்.
வட இந்திய, தென் இந்திய , சைனீஸ் உணவு வகைகள் பலவற்றைச் சுலபமாக சமைக்க முடியும்.
கரிபடாமல், கைகள் அழுக்காகாமல் நிறைய பாத்திரங்களை பயன்படுத்தாமல் சமைக்கலாம்.
சிறு குழந்தைகள் கூட பயம் இல்லாமல் மைக்ரோவேவ் அவனில் சமைக்கலாம்.
எந்தப் பாத்திரத்தில் சமையல் செய்கிறோமோ அதே பாத்திரத்தில் சூடாக உணவைப் பரிமாறும் வசதியும் மைக்ரோவேவ் அவனில் இருக்கிறது.
கடும் கோடையில் சமையலறை சூடாகி நாமும் வேர்த்து வழியாமல் சமைத்து முடித்து விடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.