இவை இதய நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்! முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்!

வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்றவற்றால்
இவை இதய நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்! முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்!
Published on
Updated on
2 min read

வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் மனிதர்களுக்கு இளம் வயதிலேயே இதய நோய்கள் தாக்குகின்றன. மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதயத்தில் உருவாகும் பிரச்னைகளை சரியாக கவனிக்காமல் விடும்போது, அது மாரடைப்பு உள்ளிட்ட பெரும் பாதிப்புக்களில் கொண்டு விட்டுவிடலாம்.

முன்கூட்டியே கண்டறிவது அவசியம்

இதே போன்று நாள்பட்ட சர்க்கரை நோய், உடல் பருமன், புகைப்பழக்கம் போன்றவற்றாலும், தீவிர இதய நோய் பிரச்னைகள் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு. மேலும் படபடப்பு உயர் ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரித்தல் போன்றவற்றையும் சரியான நேரத்தில் கண்டறிய வேண்டும். இவை இதய நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

உயிர் காக்க உதவும் நவீன பரிசோதனைக் கருவிகள்

இதய நோய்க்கு தற்போது பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேலும் இதய நோய் பாதிப்புக்களைக் கண்டறியவும், அதற்குச் சிகிச்சை அளிக்கவும் அதி நவீன கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளின் உதவியால் இதய நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளிக்க முடிகிறது. இதனால் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காக்க முடிகிறது.

உலகத் தரத்துக்கு இணையாக

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன உயர் ரக கருவிகளின் உதவியுடன் இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ஜப்பான் நாட்டு மருத்துவமனை, அமெரிக்க மருத்துவமனையோடு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் வெளிநாடுகளில் இதய சிகிச்சைக்கு அறிமுகமாகும் சிகிச்சை முறைகள் இங்கும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மிகவும் சிக்கலான நேரங்களில் வெளிநாடுகளின் மருத்துவ நிபுணர்கள் வரவழைப்பட்டு சிகிச்சை அளிக்கும் வசதியும் உண்டு.

இதய நோய்களுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ ப்ளாஸ்டி, அடைப்புகளை துல்லியமாகக் கண்டறியும் கேமரா மூலம் ஆஞ்சியோ ப்ளாஸ்டி, ரத்தக் குழாய் சுவற்றில் படிந்துள்ள சுண்ணாம்புக் கற்களை உடைத்து அகற்றும் ட்ரில்லிங் ஆஞ்சியோ ப்ளாஸ்டி, எலக்ட்ரோ ஃபிஸியாலஜி, ஆல்கஹால் அப்லேஷன், செயற்கை இதயக் கருவி பொருத்துதல், பெரிபரல் ஆஞ்சியோ ப்ளாஸ்டி போன்ற சிகிச்சைகள் சிறப்பாக அளிக்கப்படுகின்றன.

இதய நோயாளிகளுக்கான சிகிச்சைகள் அனைத்தும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் குழுவால் அளிக்கப்படுகிறது. மேலும், இதய நோய்களுக்கான தடுப்பு மருத்துவமும் சிறப்பாக வழங்கப்படுகிறது.

- டாக்டர் ஏ.மாதவன், இதய மருத்துவத் துறை இயக்குநர், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com