சுடச்சுட

  

  இரைப்பை புற்றுநோய் யாருக்கு வரும்? இந்த அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதித்துப் பாருங்கள்!

  By உமா  |   Published on : 11th January 2018 02:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  00_critical_illness_plan_0

   

  நோயைக் காட்டிலும் அது ஏற்படுத்தும் பயமும் பதற்றமும் கொடுமையானது. நவீன காலத்தில் வித விதமான நோய்களும், அது குறித்த சந்தேகங்களும், தயக்கங்களும் பலருக்கு உள்ளன. இதெல்லாம் எனக்கு வராது என்று நாம் ஒருபோதும் அலட்சியமாக இருந்துவிட முடியாது. போலவே எனக்கு இது வந்துடுமோ என்று பயந்தபடியும் வாழ முடியாது. இதற்கு என்னதான் தீர்வு? நோய்களைப் பற்றியும் நவீன வாழ்வியல் பற்றியும் சரியான புரிதலும் விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் தேவை. ஆரோக்கியமான வாழ்க்கையே நோயைத் தவிர்ப்பதற்கான முதல்படி என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்றபடி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

  இரைப்பை புற்றுநோய் யாருக்கு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? இந்தப் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்திவிடமுடியுமா என்று சென்னையில் நடந்த மருத்துவ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட மருத்துவர் சந்திரமோகன் பேசினார். டாக்டர் சந்திரமோகன் சென்னை அரசு பொது மருத்துவமனையின் இரைப்பைக் குடலியல் அறுவை சிகிச்சை மையத்தின் முன்னாள் இயக்குனர் ஆவார். தற்போது ஈசோ இந்தியா எனும் அமைப்பிற்குத் தலைவராக உள்ளார். இரைப்பைப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை ஈசோ இந்தியா செயல்பட்டு வருகிறது. 

  இரைப்பை புற்றுநோய் பற்றி அண்மையில் சென்னையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வொன்றில் டாக்டர் சந்திரமோகன் கூறியது, 'பசிக்கவில்லை, உணவை விழுங்குவதில் சிரமம் உள்ளது என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். ஐந்தே நிமிடங்களில் எடுக்கக் கூடிய எண்டோஸ்கோப்பி எனும் பரிசோதனையின் மூலம் ஒருவரது இரைப்பையைச் சோதித்து, புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறிந்துவிடலாம். அந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவத்தைத் தொடங்கி, பாதிப்பு எந்த அளவில் உள்ளதோ அதற்குரிய முறிஅயில் சிகிச்சையைத் தொடங்கிவிடலாம். இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம்’ என்றார்.

  இரைப்பை புற்றுநோய் குறித்த கட்டுரைகளை ஈசோ இந்தியா அனுப்பலாம். ஜனவரி 20-க்குள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். இது குறித்து அமைப்பின் தலைவரும் இரைப்பை-குடல் சிகிச்சை நிபுணருமான சந்திரமோகன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:- 'வயிறு-உணவுக் குழாய் புற்றுநோயைத் தடுக்க முடியும்-குணப்படுத்த முடியும்-இதை உலகம் உணரட்டும்' எனும் தலைப்பில் ஒரு பக்க அளவில், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஜனவரி 20-க்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.   

  info@esoindia.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 'டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன், 103, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை-84' என்ற முகவரிக்கு தபாலிலோ கூரியரிலோ அனுப்பலாம்.

  கூடுதல் தகவல்களுக்கு  www.esoindia.org   என வலைதள முகவரியைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai