இளம் தாய்மார்களின் கவனத்திற்கு: பசும்பால், புட்டிப்பால் எதுவும் தாய்ப்பாலுக்கு நிகராகாது!

தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால் ஏனென்றால் இந்த உலகில் அந்த தாய்ப்பாலுக்கு
இளம் தாய்மார்களின் கவனத்திற்கு: பசும்பால், புட்டிப்பால் எதுவும் தாய்ப்பாலுக்கு நிகராகாது!

(உலகத்தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 - ஆம் தேதி வரை)

தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால் ஏனென்றால் இந்த உலகில் அந்த தாய்ப்பாலுக்கு சரிசமான ஒன்று எதுவுமில்லை பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும், பெரும்காரணமாக இருப்பது தாய்ப்பால் ஒன்றே என கருதி அதனுடைய அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டே சர்வதேச மருத்துவக்கழகம் 1990-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுதோறும் உலகத்தாய்ப்பால் ஊட்டும் வாரத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டமானது உலகெங்கும் 170க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் நடைபெறுகிறது.

தாய்ப்பாலின் சத்துக்கள்

குழந்தை பிரசவமானவுடன் முதல் நாளான்று உருவாகும் சீம்பால் அடர்த்தியான சத்துக்களை கொண்டது அது மட்டுமல்ல பாக்டீரியா வைரஸ் போன்ற கிருமிகளில் இருந்து தாக்குதலை எதிர்கொள்கிறது.

தாய்ப்பால் புகட்டுவதால் சேய்க்கு மட்டும் பயன் கிடைப்பதில்லை அது தாய்க்கும் நல்ல பயன் தருகிறது, தாயின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் தாக்கத்திலிருந்தும் காக்கப்படுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைகளுக்கு கட்டாயம் 6- மாதங்களுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கவேண்டும் அதற்கு பிறகு தான் பிற உணவுகள் சேர்த்து வழங்கப்பட வேண்டும் அதிலும் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுப்பது இன்னும் நல்லது.

இப்படி வழங்குவதால் உலக அளவில் குழந்தைகள் இறப்பு குறைந்து வரும் என்பது முற்றிலும் நிதர்சனம். பிறந்த குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் நிறைந்து இருப்பதால் தாய்ப்பால் புகட்டுவதை எக்காரணம் கொண்டும் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ கூடாது. பணமில்லாமல் கிடைக்கும் அமுதம்தான் தாய்ப்பால். இது குழந்தைகளின் சிறுவயதில் ஏற்படக்கூடிய நோய்கள் மட்டுமல்ல பிற்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்தும் தடுக்கும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. சத்து மிகுந்த தாய்ப்பாலில் உள்ள என்ûஸம்கள்; மற்றும் நோய் எதிர்ப்புச்சத்துக்கள் ஆகியவை குழந்தைகளது மென்மையான உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்து பரிபூரண வளர்ச்சியை அளிக்க வல்லவையாகும்; தாய்ப்பாலில் ஊட்டச்சத்து மிகுந்து இருப்பதுடன் அது குழந்தைக்கு எளிதாகச் செரிக்க கூடியதாகும் மேலும் தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தைக்கும்; அதன் தாய்க்கும் இடையே உள்ள பாசம் அதிகரிக்கும்.

மன அளவில் ஒரு தாய் குழந்தையிடம் அன்புடையவளாகவும், இளகிய குணமுடையவளாகவும் மாறுகிறாள் என பல உளவியில் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பேறுகால இடைவெளியை தள்ளிவைக்கும் ஆற்றல் தாய்ப்பாலிற்கு இருக்கிறது குழந்தைகளின் மோசமான ஆரோக்கியம் என்பது அதன் குழந்தைப் பருவத்திலே சரிசெய்யப்பட தவறினால் பின்பு பல்வேறு நோய்களுக்கு அவதிப்பட்டாலும் வளர்ந்தபிறகும் அந்த நோயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இறப்பு விகித்தை குறைக்க வேண்டும்

இந்தியாவை பொருத்தவரைக்கும் இங்குள்ள குழந்தைகளை பாதிக்கும் விதிமுறைகளை இரண்டு பகுதியாக பிரிக்கலாம் ஒன்று ஊட்டச்சத்து குறைவு, மற்றொன்று குழந்தை ஆரோக்கியத்தில் மோசமான செயல்திறன்; தாயின் ஆரோக்கியத்தை அவளது குழந்தையின் ஆரோக்கியத்தில் இருந்து தொடர்பில்லாததாக இருப்பது இந்தியாவின் பொது சுகாதாரத்தில் உள்ள மிகப்பெரிய தோல்வியாகும். இதனால் தாயின் மோசமான உடல்நலம் அவளது குழந்தையையும் பாதிக்கிறது. கர்ப்பிணிகளில் தோராயமாக 10 முதல் 15 சதவீதம் நபர்களுக்கு அவசரக்கால மற்றும் பிரசவ சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்நிலைமை எந்த கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் என்று முன் கூட்டியே கண்டறிய முடியாது. அப்படி தெரிந்தாலும் மருத்துவர்கள் பெண்கள் நலன் கருதி அத்தகவலை வெளியே சொல்லமாட்டார்கள் என்பது முற்றிலும் உண்மை. இது போன்ற மோசனமான நிலைகளை தடுப்பதற்கு பெண்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதைவிட, கர்ப்பிணியாக இருக்கும் போது நல்ல காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட வேண்டும். சர்வதேச மருத்துவக்கழகம் தாய்ப்பாலுக்கு மாற்றான உணவை ஏற்றுக்கொள்ளவேயில்லை.

பசும்பால், புட்டிப்பால் என எதனையும் தாய்ப்பாலுக்கு நிகராக கூறமுடியாது போதிய அளவு தாய்மார்களிடம் தாய்ப்பால் இல்லாததால் கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழக அரசால் சிறார் நல நிலையம், மற்றும் குழந்தைகள் நல மருத்துவமணையில் தாய்ப்பால் வங்கி என்னும் திட்டம் தொடங்கப்பட்டது இதனால் அதிகமானோர் மகிழ்ச்சியடைந்தனர். தாய்மார்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் பக்கத்து ஊர்கள் இப்படி பயணம்போகும்போது குழந்தைகள் தாய்ப்பாலுக்காக அழுதால் சில தாய்மார்கள் பாலுட்டுவதற்கு தயங்குகிறார்கள் இடமில்லாமல் தவிக்கின்றனர். இதனால் 2015 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதியில் இருந்து தமிழக அரசு சார்பாக பாலூட்டுவதற்கு வசதியாக அரசு பேருந்து முனையங்கள்; நகராட்சி மற்றும் நகரப்பேருந்து நிலையங்கள்; மற்றும் பேருந்து பணிமணைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் தனியாக தாய்ப்பால் ஊட்டும் அறை திறக்கப்பட்டு தற்போது நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com