உடல் சூட்டினால் ஏற்படும் குறைபாடு  உடனே நீங்க

புடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன.
உடல் சூட்டினால் ஏற்படும் குறைபாடு  உடனே நீங்க
Published on
Updated on
1 min read

காய் :  புடலங்காய்  பச்சடி

சத்துக்கள் : புடலங்காயில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

புடலங்காய் தோல் விதையுடன் (200  கிராம்) , சாம்பார் வெங்காயம் (3), மிளகுத் தூள் (தேவைக்கேற்ப) , கொத்தமல்லித் தழை (1கைப்பிடி) , எலுமிச்சம் பழச் சாறு தோலோடு (1பழம்), தயிர் (100 மி.லி).

செய்முறை

முதலில் புடலங்காயை சுத்தம் செய்து (தோல், சதை, விதையோடு) சிறிது சிறிதாக அரிந்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் சாம்பார் வெங்காயம், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி ஒன்றாக கலக்கிக்கொள்ளவும். பின்பு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தயிர் இரண்டையும் ஊற்றி அதனுடன் தேவைக்கேற்ப மிளகுத் தூள் , சீரகம் , உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொண்டு தினமும் காலை வேளை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல்  சூட்டினால் உண்டாகும் குறைபாடு உடனே நீங்கும்.

(பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுக்கலாம்)

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com