முகத்தின் வறட்சி நீங்கவும், தேகம் பளபளப்பாகவும் மாற இது உதவும்!

முகத்தின் வறட்சி நீங்கவும், தேகம் பளபளப்பாகவும் மாற இது உதவும்!

வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.
Published on


 
காய் :  வெண்டைக்காய் 

சத்துக்கள் : வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் (100 கிராம்) 
சிறு பயிறு (25 கிராம்) 
துத்தி இலை (1 கைப்பிடி)
ஆவாரம் பூ (1 கைப்பிடி) 
மிளகு, சீரகம், பூண்டு,பெருங்காயம், உப்பு அனைத்தும் (தேவையான அளவு)

செய்முறை : வெண்டைக்காயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து முக்கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பின்பு அந்த நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதனை நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

பயன்கள் : இந்த நீரை தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் வறட்சியான உடலமைப்பு மற்றும் முக வறட்சி அனைத்தும் நீங்கி தேகம் பளபளக்கும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com