பற்பசையால் புற்றுநோயா? எச்சரிக்கை ரிப்போர்ட்!

ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி அப்படீன்னு சொல்லி வச்சிட்டுப் போனாங்க. ஆனா அப்படியா நடைமுறையில இருக்குது? 
பற்பசையால் புற்றுநோயா? எச்சரிக்கை ரிப்போர்ட்!

ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி அப்படீன்னு சொல்லி வச்சிட்டுப் போனாங்க. ஆனா அப்படியா நடைமுறையில இருக்குது? 

காலையில முதல்ல பல்லை விளக்கிட்டுதான் மறு  வேலை பார்க்கிறோம். இல்லாட்டி யாருங்க கிட்ட வந்து பேச முடியும்? நமக்கே நம்ம பல்லு நாத்தம் பிடிக்காது. ஆனா ஒரு நாளைக்கு இரண்டு வேளையும் பல் துலக்க வேணும்னு மருத்துவங்க சொல்றாங்க.. எத்தனை பேருங்க கடைபிடிக்கிறாங்க சொல்லுங்க?

இப்பிடி பல் தேய்க்கணும், அப்பிடி பல் தேய்க்கணும்னு மருத்துவர்கள் சொல்லிக் கொடுத்தாலும், அவரவர் வழக்கப்படிதான் பல் தேய்க்கிறாங்க. சிலர் பல் துலக்கிறதைப்  பார்த்தா பல்லே தேய்ஞ்சு போயிடும் போல இருக்கும்.

இரண்டு வேளையும் பல் துலக்கறவங்க 69% தான் அப்படின்னு புள்ளி விபரம் சொல்லுது. பல் தேய்ப்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.  இருந்தாலும், பல் தேய்க்க உபயோகப் படுத்துற பேஸ்ட்டப்  பத்தி தெரிஞ்சுக்க வேணும் இல்லியா?

இப்போ நிறைய பேருங்க டிவி முன்னாடிதான் உக்காந்து பொழுதைப் போக்கறாங்க. டிவியில வர விளம்பரங்களோ கணக்கு வழக்கு இல்லை. முக்கியமா பற்பசை அதாங்க டூத் பேஸ்ட் .விளம்பரம், அதுல முத்து போல பல்லைக் காட்ட, பெண்ணோ பையனோ சிரிச்சா எல்லோருமே லயிச்சுப் போயிடறோம். நாம  கண்ணாடி முன்னால நின்னு சிரிச்சு சிரிச்சு பாக்கறோம். 

பல்லைத் தேய்ச்ச உடனேயே ஒரு புத்துணர்ச்சி வருதில்லே.? எதனால தெரியுமா? அதுல நிறம், மணம், சுவைக்காக பல வேதிப் பொருட்களை சேர்க்கறாங்க அதனாலதான் கம கமன்னு இருக்கு. 

நாம உபயோகப்படுத்தற டூத் பேஸ்டுல, சிலதுல புளோரைடு அதிக அளவில இருக்கு அப்படீன்னு உங்களுக்கு தெரியுமா? அது பல்லுல இருக்கிற எனாமலை போக்கறதோட நிக்காம, பல்லு நிறத்தையும் மங்கலாக்கி விடுது. 

பல குழந்தைங்களுக்கு சரியா பல் தேய்க்கத் தெரியல. நிறைய குழந்தைங்களுக்கு பேஸ்ட் வயித்துக்கு போயிடுது. அதனால அவங்களுக்கு வயித்துப்போக்கு உண்டாகுது. ஏன்னா, பேஸ்டுல, சோர்பிடால் அப்படீன்னு ஒரு திரவத்தை பேஸ்ட் வறட்சியில்லாம இருக்கணுங்கறதுக்காக சேர்க்கறாங்க. அதனால அவங்களுக்கு ஒவ்வாமை உண்டாயிடுது. 

அது மட்டுமில்லீங்க. பேஸ்டுல சுவை சேர்க்கணும்கிறதுக்காக, சாச்சரின் அப்படீன்னு ஒரு செயற்கை இனிப்பை சேர்க்கறாங்க. இதனால சிறுநீர்ப்பையில புற்றுநோய் வருதுன்னு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. 

ஏழு நிறங்களிலதான் டூத் பேஸ்ட் தயார் செய்யணும்னு சொல்லி, மத்த நிறங்களுக்கெல்லாம் அரசாங்கத்துல தடை விதிச்சிருக்காங்க. 

ஆனா தடையெல்லாம் மீறி பல நிறங்களில பேஸ்டு சந்தைக்கு வருது. இதனால ரத்த அழுத்தம், கேன்சர் வர வாய்ப்புங்க அதிகமா இருக்காம். 

பல் தேய்க்கும் போது புசு புசுன்னு நுரை வந்தால்தான் நல்லா இருக்கு. தேய்ச்ச திருப்தியும் இருக்கு. நுரை கம்மியா வர பேஸ்டு பிடிக்கமாட்டேங்குது. 

நுரை வரதுக்காக, வீட்டை சுத்தம் செய்ய உபயோகிக்கிற, சோடியம் லாரில் சல்பேட் அப்படீங்கிற வேதிப்பொருளை சேர்க்கறாங்க. இதனால் வாயில, முக்கியமா நாக்கில கொப்புளங்கள் வருது. 

மேல சொல்றேன் படிங்க. பேஸ்டு கெட்டியாக இருக்கணும்னு, கார்ஹீன் சேர்க்கப்படுது. இதனால மலக்குடல் புற்றுநோய், இரைப்பை அழற்சி உண்டாகுது. 

டூத் பேஸ்ட் உறையாமல் இருக்க, புரோபலின் கிளைக்கால் அப்படீங்கிற வேதிப்பொருள சேர்க்கறாங்க. இதனால நரம்பு மண்டலம், இதயம், கல்லீரல் எல்லாமே பாதிக்கப்படுதாம். 

ஒரு பேஸ்ட் வாங்கப் போனா எப்படி பார்த்து வாங்கணும்னு எல்லோருக்கும் தெரியாது. பேசாம பல் டாக்டர் கிட்ட ஆறு மாசத்துக்கு ஒருமுறை போகும்போது, அவங்கிட்டேயே கேட்டுக்கலாம். 

கலருக்கும், சுவைக்கும் ஆசைப்பட்டு, கண்ட பற்பசையை வாங்கி அவஸ்தைப்பட வேணாமில்ல. வேலியில போற ஓணானை வம்படியா மேல விட்டுக்கிட்டு, அப்பறம் குத்துது, கொடையுது அப்படீன்னு அமர்க்களம் பண்ணுவானேன்?

பல் பராமரிப்புடன்  'பல்' லாண்டு  சுகமாக வாழ்வோமே! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com