உங்கள் முகத்தில் விஷப் பருக்களா? உடனே இதை தடவுங்கள்!

சகல விதமான வாந்திகளுக்கும் திருநீற்றுப் பச்சிலை நல்ல மருந்து
உங்கள் முகத்தில் விஷப் பருக்களா? உடனே இதை தடவுங்கள்!
Published on
Updated on
1 min read
  • சகலவிதமான வாந்திகளுக்கும் திருநீற்றுப் பச்சிலை நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. 
  • இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம்.
  • முகம் போன்ற பகுதிகளில் விஷத்தன்மை வாய்ந்த பருக்கள் தோன்றுவதைக் கண்டிருப்பீர்கள். 
  • இந்த வசப் பருக்களை தெரிந்தோ, தெரியாமலோ நகத்தால் கிள்ளிவிட்டால் அது புரையோடி சீழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தைக் கூட ஏற்படுத்திவிடும்.
  • இத்தகைய விஷப் பருக்கள் தோன்றினால் யாரும் கவலைப் படத் தேவையில்லை. 
  • திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு எனப்படும் கடைச் சரக்கை வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவினால் போதும், பரு காய்ந்து கொட்டிவிடும்.
  • நஞ்சினை முறிக்க மாற்று மருந்தாகப் பயன்படுகிறது.
  • கிராமப்புறங்களில் கை வைத்தியத்திற்கு இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது. 
  • ஜுரத்தைக் குறைத்து வியர்க்கச் செய்யும் பூச்சிகளை அகற்றும் கிருமி நாசினியாகும். 
  • நோயை ஆற்றும். கபத்தை வெளியேற்றும். புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இதன் இலைசாறைத் தடவலாம். 
  • அஜீரணத்தைப் போக்கும். முத்திரக் கல்லை நீக்கும். படர்தாமரை நோயைக் குணப்படுத்தும். இதிலிருந்து எடுக்கப்படும் தைலம் சரும நோய்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • பச்சிலையை புண், பரு, பேன் இவைகளைப் போக்க தேய்த்துக் குளிக்கலாம். இதன் மணத்திற்காக எண்ணெய் முறைகளில் சேர்ப்பதுண்டு. 
  • பச்சிலை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி, சடாமாஞ்சில், வாய்விடங்கம், கசகசா, கார்போக அரிசி, சந்தனம், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு இவைகளைப் பொடித்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு எண்ணெயில் குழைத்துப் பூசி தலை முழுகினாலும், பொடியைத் தனியாக தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு, சொறி, கற்றாழை நாற்றம் போகும். உடல் சூடு தணியும்.
  • இலைச்சாறு பருக்கள், வடுக்கள் போன்றவற்றிலிருந்து சருமத்தைக் காக்கிறது. இதன் சாறுடன் வசம்பு சேர்த்து, அரைத்து சருமத்தில் தோன்றும் பருக்களுக்குப் போட்டால் விரைவில் குணம் தெரியும். 
  • புரையோடி சீழ் வைத்த பருக்களுக்கும், விஷப் பருக்களுக்கும் மூன்று வேளை தடவ பரு காய்ந்து உதிர்ந்து விடும்.
  • கண்களுக்கு இலையின் சாறு தடவ கண்கட்டி போன்ற கண் நோய்கள் குணமாகும். 
  • விதைகள் குளிர் பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுத்தப்படுகின்றன.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com