உதடுகள் ரோசாப்பூவைப் போல ஜொலிக்க வேண்டுமா? இந்த 10 கட்டளைகளை பின்பற்றுங்கள்!

உதடுகள் வறண்டு போகாமல் இருக்கக் கற்றாழைக் கூழை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் பளிச்சென்று இருக்கும்.
உதடுகள் ரோசாப்பூவைப் போல ஜொலிக்க வேண்டுமா? இந்த 10 கட்டளைகளை பின்பற்றுங்கள்!
  1. உதடுகள் வறண்டு போகாமல் இருக்கக் கற்றாழைக் கூழை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் பளிச்சென்று இருக்கும். வாரம் மூன்று முறை இவ்வாறு செய்தால் அதிக பலன் கிடைக்கும். கற்றாழை சேர்க்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்துவதும் பலன் தரும்.
  2. சிலர் மூக்கினால் சுவாசிக்காமல் வாய் வழியா சுவாசிப்பார்கள். அது அவர்களுக்கே தெரியாமல் பல தொல்லைகளுக்கு வழி வகுக்கும். முக்கியமாக உதட்டின் அழகு கெடும்.
  3. உதடுகளில் அடிக்கடி வறட்சி அல்லது வெடிப்பு ஏற்பட்டால் அது வைட்டமின் குறைபாடாக இருக்கலாம். அல்லது தாது உப்புக் குறைபாடாகவும் இருக்கலாம். 
  4. சிகரெட் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தாலும் அது உடல் நலத்துக்கு மட்டுமல்ல உதட்டு நலத்துக்கும் கெடுதல்தான். காரணம் சிகரெட்டில் உள்ள நிகோட்டின்
  5. உதட்டின் நிறத்தை மாற்றுவதுடன் இல்லாமல் நாள்பட்ட பழக்கத்தால் உதட்டுப் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிவிடும்.
  6. வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றூம் வைட்டமின் ஈ சத்து அதிகமுள்ள பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உதட்டழகை மேம்படுத்தும். நெல்லிக்காய், ஆரஞ்சு ஆகியவற்றில் இச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 
  7. உதடு வெடித்திருந்தால் பாதாம் எண்ணெய் அல்லது தேனை அதில் தடவினால் வெடிப்பு நீங்கும்.
  8. லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறவராக இருந்தால் அதை உதட்டினில் தடவும் முன், வெண்ணெயை லேசாகத் தடவ வேண்டும். அதன் பிறகு தான் லிப்ஸ்டிக்கை பூச வேண்டும். காரணம் உதட்டுச் சாயத்தில் உள்ள கெமிக்கல் உதடுகளில் படும் போது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.
  9. சிலருக்கு உதட்டு வறட்சி ஏற்பட்டால் நாவினால் அதைத் தடவி ஈரப்படுத்திக் கொள்வார்கள். அது தவறான பழக்கம். உதடுகளை கடிப்பதும் தவறு.
  10. தினமும் 8 தம்ளர் தண்ணீர் குடிப்பதால் உதடு வறட்சியடைவது தடுக்கப்படும். அதிகப்படியான வெப்பம் மற்றும் அதிகப்படியான குளிர் இரண்டுமே உதட்டினை சட்டென்று பாதிக்கும். வாசலின் அல்லது பெட்ரோல் ஜெல் தடவி உதட்டைப் பாதுகாக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com