ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க உதவும் உன்னதமான கஞ்சி

முதலில் சாலாமிசிரியை இடித்து நன்றாக தூள்  செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
couple
couple
Published on
Updated on
1 min read

 
சாலாமிசிரிக் கஞ்சி

தேவையான பொருட்கள்
 
சாலா மிசிரி - 100  கிராம்
பசும் பால் - 150 மி.லி
பனங்கற்கண்டு -  தேவையான அளவு

செய்முறை
 

  • முதலில் சாலாமிசிரியை இடித்து நன்றாக தூள்  செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் பசும் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும்.
  • காய்ச்சிய பாலில் சாலா மிசிரி தூளை 5 கிராம் அளவு எடுத்து பாலில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் அதனை கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • பின்பு நன்கு கலந்து கஞ்சிபோல் பதம் ஆனவுடன் அதில் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து குடிக்கவும்.

பயன்கள் 

  • இந்த கஞ்சியை  தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் உயிரணு குறைபாடு உள்ளவர்கள் குடித்து வந்தால் உயிரணுக்களின் ஆற்றல் அதிகரித்து தாம்பத்யம் உணர்வு அதிகரிக்கும் .
  • படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com