இதய நோயாளிகள் மற்றும் மூலம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு ஊறு விளைவிக்காத ஊறுகாய்!
By கோவை பாலா | Published On : 01st April 2019 01:23 PM | Last Updated : 01st April 2019 01:23 PM | அ+அ அ- |

அத்திக்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
அத்திக்காய் - கால் கிலோ
மிளகு - 50 கிராம்
தனியா - 5 கிராம்
மஞ்சள் - 5 கிராம்
ஓமம் - 5 கிராம்
பெருங்காயம் - 5 கிராம்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - 20 கிராம்
செய்முறை : அத்திக்காயை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக்கி லேசாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அத்திக்காயை காம்பு நீக்கி இரண்டாக அரிந்து ஒரு. மண் சட்டியில் போட்டு அரைத்து வைத்துள்ள விழுதையும் இத்தோடு சேர்த்து நன்றாக கலக்கி பாத்திரத்தின் வாயில் துணியை கட்டி ஒரு வாரம் வரையில் வெயிலில் வைத்து எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். ஒவ்வொரு நாளும் வெயிலில் வைக்கும் போது நன்றாக குலுக்கி பின்னர் வெயிலில் வைக்கவும்.
பயன்கள் : இந்த ஊறுகாயை தினந்தோறும் உணவில் சேர்த்து வந்தால் செரிமானம் சீராகும், பித்தம் தணியும். இதய நோயாளிகள் மற்றும் மூலம் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு ஊறு விளைவிக்காத உன்னதமான ஊறுகாய் இந்த அத்திக்காய் ஊறுகாய்
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com