டான்சில், இளைப்பு, காச நோய்கள் குணமாக இது உதவலாம்!

முதலில் நல்லெண்ணெய்யை வாணலியில் ஊற்றி சூடாக்கி அதில் அதிமதுரத்தைப் பொடியாக்கிச் சேர்த்துக் கொள்ளவும்.
டான்சில், இளைப்பு, காச நோய்கள் குணமாக இது உதவலாம்!

கீரை : கரிசலாங்கண்ணிக் கீரைத் தைலம் 
 
தேவையான பொருட்கள் :
 
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு  - 1 லிட்டர்
நல்லெண்ணெய் - 2 லிட்டர்
அதிமதுரம் - 50 கிராம்

செய்முறை : முதலில் நல்லெண்ணெய்யை வாணலியில் ஊற்றி சூடாக்கி அதில் அதிமதுரத்தைப் பொடியாக்கிச் சேர்த்துக் கொள்ளவும். பின்பு கரிசலாங்கண்ணிச் சாற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும். தீயை மட்டுப்படுத்தி சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து  கடுகு நிறம் வந்தவுடன் இறக்கி வைத்துக்கொள்ளவும்.

சாப்பிடும் முறை : இந்த தைலத்தை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் தீராத இருமல் , இளைப்பு , டான்சில் மற்றும் காசநோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக செயல்படும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com