சுடச்சுட

    

    மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலி உடனே நீங்க

    By கோவை பாலா  |   Published on : 23rd January 2019 11:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stomach_ache

     

    சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

    தீர்வு 
    வெண்பூசணி தோலோடு (100 கிராம்)
    வெள்ளரி விதை (10 கிராம்)
    வெள்ளை மிளகு(5கிராம்)
    பனங்கற்கண்டு (100 கிராம்)
    பூண்டு (2 பல்)
    சாம்பார் வெங்காயம் (2)

    செய்முறை : வெண் பூசணிக்காயை நன்றாக கழுவி தோலோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் மேற்கூறிய பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் தலா 50 மில்லி வீதம் குடித்து வந்தால் மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்று வலி உடனே நீங்கும்.

    தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

    குறிப்பு : அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
    96557 58609 / Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai