சுடச்சுட

  

  செரிமானப் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படலாம்! புதிய ஆய்வு முடிவு!

  By சினேகா  |   Published on : 25th June 2019 04:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SCIENCE_CELIAC_MIA-CARNEVALE-1080x720

  அண்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சியில், செலியாக் நோய் (உணவு செரிமானக் கோளாறுகள்) உள்ள நோயாளிகள் வைட்டமின்கள் பி 12 மற்றும் டி உள்ளிட்ட பல நுண்ணூட்டச்சத்துக்களிலும் குறைபாடுள்ளவர்களாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர், இந்த நோயைக் கண்டறிந்த உடனேயே, உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  மேயோ கிளினிக்கில் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய ஆய்வில், 309 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2000 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு நடுவில் அவர்கள் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் எனக் கண்டறியப்பட்டது.  

  நோயால் அவதிப்படுவதோடு மட்டுமல்லாமல், பல நோயாளிகளுக்கு நோயறிதலின் போது நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளும் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். துத்தநாகக் குறைபாடு என்பது மிகவும் பொதுவான குறைபாடாகக் கண்டறியப்பட்டது, இது 59.4 சதவிகித நோயாளிகளில் காணப்பட்டது. வைட்டமின்கள் பி 12 மற்றும் டி, ஃபோலேட், இரும்பு மற்றும் தாமிரம் ஆகியவை பிற குறைபாடுகளில் அடங்கும்.

  மேயோ கிளினிக் ஆராய்ச்சியின் முடிவு ஜூலை மாத இதழில் வெளியிடப்பட்டது. செலியாக் நோய் உள்ளவர்களுக்கு சில ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்திருக்கும் என்பதை மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும், இந்த குறைபாடுகளைக் கண்டறிந்த உடனேயே அது கவனிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றன.

  எடை இழப்பு மற்றும் குறைந்த உடல் எடை, இவை இரண்டும் பொதுவாக இந்த நோயுடன் தொடர்புடையவை, உண்மையில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை விட இது குறைவுதான் என கண்டறியப்பட்டது, இத்தகைய எடை இழப்பு 25.2 சதவிகித நோயாளிகளில் மட்டுமே காணப்படுகிறது

  'புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகளின் இந்த குழுவில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளின் அறிகுறி குறைவாக இருப்பதைக் காணும்போது சற்றே ஆச்சரியமாக இருந்தது, என்றார் இந்த ஆராய்ச்சியின் முதன்மை எழுத்தாளர் ஆடம் பிளெட்சோ, எம்.டி.

  'செலியாக் நோயாளிகளுக்கு ஏற்படும் வழமையான எடை இழப்பு, ரத்த சோகை மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றிலிருந்து மாறுபட்டு தற்போது வேறு சில
  அறிகுறிகளால் கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது' என்று டாக்டர் பிளெட்சோ கூறினார்.

  'இருப்பினும், பெரியவர்களுக்கு நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் பொதுவானவை,  இவை மேலும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.'

  இந்த குறைபாடுகள் ஆரோக்கியத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும், அவை என்ன என்னவென்று தெரியாத போதும்' என்று வியக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

  'இந்த குறைபாடுகளைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை' என்று டாக்டர் பிளெட்சோ கூறுனார்..

  மேயோ கிளினிக் வலைத்தளத்தின்படி, செலியாக் நோய் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு ஆகியவற்றில் காணப்படும் க்ளூடென் என்ற புரதத்தை சாப்பிடுவதன் நோய் எதிர்ப்பு எதிர்வினை ஆகும். காலப்போக்கில் இந்தப் பசையம் (க்ளூடென்) சாப்பிடுவதால் சிறுகுடலின் வெளிப்புறத்தை சேதப்படுத்திவிடும் மேலும் சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கும். அதன் பின் வயிற்றுப்போக்கு, சோர்வு, ரத்த சோகை மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகளுக்கு இது வழிவகுக்கிறது. இதற்கு எந்தவொரு சிகிச்சையும் இல்லை, ஆனால் அதிக க்ளுடென் இல்லாத உணவை உட்கொள்வதனால் இந்தப் பிரச்னையை சமாளிக்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai