இதயமே நலமா?
இதயமே நலமா?Center-Center-Kochi

இதய நோய்க்கு தேவை எச்சரிக்கைதானே தவிர பயமல்ல!

இதய நோய் வந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மாறாக பயத்துடன் வாழ்கிறார்கள்.
Published on

இதய நோய் வந்துவிட்டால், அதனை நினைத்தே இருக்கும் வாழ்நாளை நரகமாக மாற்றிக்கொள்ளாமல், எச்சரிக்கையுடன் இருந்து அனைவரையும் போல மகிழ்ச்சியாக வாழலாம் என்பதே மருத்துவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

சிலர் மாரடைப்பு வந்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னரும், பயம் நீங்காமல் இனி எல்லாம் முடிந்துவிட்டது என்று கடைசி நாள்களை எதிர்நோக்கி இருப்பவர்கள் போல பயத்துடனே காணப்படுவார்கள்.

இன்னும் சிலர் தங்களுக்கு நெஞ்சு வலி சரியாகிவிட்டது என்றவுடன் துளி கூட அதைப் பற்றிப் பயப்படாமல் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். திரும்பி விடுவார்கள் என்றால், முற்றிலும் அதே கொழுப்பு நிறைந்த உணவு, மது என திரும்பிவிடுவார்கள்.

மருத்துவர்களின் கூற்றுப்படி இவை இரண்டுமே சரியில்லை. கூடுமானவரை இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். வந்துவிட்டால் எவ்வளவு கவனமாகவும் பாதுகாப்புடனும் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதேவேளையில், இயல்பான வாழ்வையும் மேற்கொள்ளலாம்.

புத்துணர்ச்சியுடன் ஒரு புதிய வாழ்வை வாழலாம்.

அதாவது, இதய அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..

முதலில், மீண்டும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்களை குறைக்க வேண்டும்.

மன அழுத்தம், பயம் போன்றவற்றிலிருந்து வெளியே வர வேண்டும். பாசிட்டிவாக இருக்க வேண்டும்.யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றின் மூலம் உடலையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

மருந்து, மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரத்த கொதிப்பு, சர்க்கரை போன்ற பிரச்னைகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இல்லற வாழ்வில் மீண்டும் புத்துணர்வோடு ஈடுபடலாம்.

அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப, பணிச் சூழலுக்கு ஏற்ப மருத்துவரின் பரிந்துரைப்படி செய்து வந்த வேலையை தொடரலாம்.

வெளியூர் பயணங்களின்போது..

நீண்ட தூர‌ப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணங்களின் போது டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை போதிய அளவு கையில் எடுத்துச் செல்வது நல்லது.

மருத்துவ குறிப்புகள், டாக்டரின் தொலைபேசி எண், போன்ற தகவல்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். குறிப்புகளை தங்கள் மொபைலில் கூட சுருக்கமாக வைத்திருக்கலாம்.

கையில் எப்போதும் வீட்டு முகவரி, அவசர எண் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

பயணத்தின் போது எவ்வித பரபரப்புக்கும் உள்ளாகாமல், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருப்பது நலம். பயணத்தின்போது ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயமும் தேவையற்றது.

ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்னைகள் இருந்தால் கிளம்புவதற்கு முன் ஒரு முறை பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் சுற்றுலா கிளம்புவது நல்லது.

ரயில் அல்லது விமானப் பயணம் நல்லது. நீண்ட தூரம் பஸ்சில் அமர்ந்து பயணிப்பது உடல் அசெளரியத்தை ஏற்படுத்தலாம்.

மருந்து தீர்ந்து போனால் அதே மாத்திரைகள் வாங்க வேண்டும். மாற்று மருந்து அல்லது டோசேஜ் மாறினால் பிரச்னையாகிவிடலாம்.

இரண்டு நாள் தானே என்று உணவுக்கட்டுப்பாட்டை மீறிவிட வேண்டும். எங்கே இருந்தாலும் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.

சரி என்ன சாப்பிடலாம்?

உப்பும் கொழுப்பும் குறைவாக உள்ள உணவு வகைகளை சிறிய அளவில் சிறு இடைவெளிவிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் என்று சொன்ன உணவுகளை சாப்பிடவேண்டாம்.

எப்போதும் எங்கு இருந்தாலும் ஒரே விதமான உ ணவு முறையை பின்பற்ற வேண்டும். ஒரு ஸ்பூன் அதிகமோ குறைவோ சாப்பிட்டாலும் அது உடல் நிலையை பாதிக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.

உணவு விஷயத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்

மருத்துவரின் பரிந்துரைப்படி சில‌ உடற்பயிற்சிகளை எங்கே இருந்தாலும் மறக்காமல் தினமும் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி அவசியம்.

மூன்று வேளை உணவைப் பிரித்து ஐந்து வேளையாக எடுத்துக்கொண்டால் நல்லது. விருந்தும் வேண்டாம், விரதமும் தேவையற்றது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com