
அரசுப் பணியாற்றும் 30 வயது பெண்மணியின் பிரச்னை:
பசியே இல்லை. சாப்பிட்டால் குமட்டுகிறது. எப்போதும் வயிறு கனக்கிறது. மலம் சரியாகப் பிரவதில்லை. தூக்கமில்லை. எல்லாப் பரிசோதனைகளும் செய்துவிட்டு ‘ஒன்றுமில்லை’ என்று சொல்லி விட்டார்கள். என் பிரச்னை தீரவேயில்லை.
பலசரக்கு வியாபாரி ஒருவரின் பரிதாபம் :
எப்போதும் வயிற்றுப் பொருமல், ஏப்பம், வயிற்று உப்புசம், வாயுப்பண்டம் சாப்பிட்டால்தான் உப்புசம் என்றில்லை. தண்ணீர் குடித்தாலும் வயிறு ஊதிக்கொள்ளும், நட்சத்திர மருத்துவமனையின் இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவழித்து 10 நாட்கள் தங்கிச் சிகிச்சை எடுத்தும் பலனில்லை.
பஸ் கண்டக்டர் ஒருவரின் புலம்பல் :
அடிக்கடி மலங்கழிப்பது பெரிய பிரச்னையாக உள்ளது. வெளியிடங்களுக்குச் சென்றாலே வேதனை தான். என்ன சாப்பிட்டாலும் உடனே மலங்கழித்தாக வேண்டிய நிலை. எந்தச் சிகிச்சையும் பயன்படவில்லை. பெரிய பெரிய மருத்துவ நிபுணர்களை எல்லாம் பார்த்து விட்டேன். நோய் தீர்ந்தபாடில்லை.
45 வயதான ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் துயரம் :
வயிறு ஊதிக்கொண்டே போகிறது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஏற்படும் அசெளரியங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. தொந்தரவுகள் குறைய 2 மணி நேரம், 5 மணி நேரம் ஆகலாம். எல்லா வைத்தியமும் பார்த்துவிட்டேன். ஹோமியோபதி ஒன்றுதான் பாக்கி.
கல்லூரி மாணவி ஒருவரின் வேதனை :
தினமும் இரண்டு வேளைதான் சாப்பிடுகிறேன். அதுவும் பெயர் அளவுக்குத் தான். பசித்துச் சாப்பிட்டு பலமாதம் ஆகிறது. எந்த உணவும் நெஞ்சைவிட்டு இறங்குவதில்லை. சாப்பிட்டால் தெம்பு வருவதற்கு பதிலாக நிலைகுலைந்து போகிறேன். மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு மாறி மாறி ஏற்படும். எந்த உணவும் பிடிக்கவில்லை. மாதவிலக்கு ஒழுங்காக வருவதில்லை.
இவர்கள் அனைவருக்கும் பலவிதப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, நீண்ட நாட்கள் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆங்கில மருத்துவர்கள், குடலியல் நிபுணர்கள் இது போன்ற பிரச்னைகளை ‘IRRITABLE BOWEL SYNDROME’ என்று பெயரிட்டுள்ளனர். ஆனால் இந்நோய்க்கான மூலகாரனங்களைக் கூற முடியவில்லை. குணப்படுத்தவும் முடியவில்லை. ஏனென்றால் நோயின் தன்மையே பல வினோதமான ஜீரணக் குழப்பங்களைக் கொண்டது. இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் போன்றவற்றின் உருவத்தில் எந்த மாற்றமுமில்லை. அசைவுகளில் கோளாறு ஏதுமில்லை. அவற்றின் சுரப்புகளில் வித்தியாசம் காண முடிவதில்லை. எல்லாம் சரியாக இருப்பதாக ஆய்வு கூட முடிவுகள் அடித்துச் சொல்லும். பின் ஏன் நோயாளி அவதிப்படுகிறார்?
ஹோமியோபதியில் நோய்க்கு – நோயின் பெயருக்கு மருந்தளிப்பதில்லை என்ற போதிலும் மலச்சிக்கல், வயிற்றுப்புண் (Ulcer), வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு, முன் சிறுகுடல் புன் (Deodenal Ulcer), அமீபியாசிஸ், அஜீரணம் (Dyspepsia), பசியின்மை (Anorexia), இரைப்பை அழற்சி (Gastritis), குடல்வாய் நோய் (Appendicitis) பூச்சிக்கடி (worms) என்று வியாதிகளின் பெயர்களைச் சொன்னவுடன் அதற்கேற்ப குறிகளை உய்த்துணர்வும், விசாரித்தறியவும் முடிகிறது.
எனது அனுபவத்தில் I.B.S. (Irritable Bowel Syndrome) நோயாளிகள் என முத்திரை குத்தப்பட்டு பலகாலம் பரிதவித்த பலரை நலப்படுத்த முடிந்துள்ளது. ஏற்கனவே சோதனைகள் மேற்கொண்டு ஆய்வு அறிக்கைகளோடு வந்தாலும் சரி, ஆய்வுகளின்றி ஆங்கிலச் சிகிச்சை பெற்றும் பலனின்றி வந்தாலும் சரி, அவரவரது நோய்க்குறிகளை ஆய்வுசெய்து ஹோமியோ மருந்துகள் அளித்து குணப்படுத்த முடிகிறது.
IBS உபாதைக்கு ஹோமியோபதியின் சில மருந்துகளின் பட்டியலுக்குள் அடங்கும் குறிகளே காணப்படுகின்றன. பரபரப்பான செயல்பாடு, மன இறுக்கம், அமைதியின்மை, ஆழ்ந்த கவலைகள், அதிகளவு உணர்ச்சிவசப்படுதல், கோபப்படுதல், எரிச்சல் அடைதல், போன்ற காரணங்களாலும் ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்கள், புளிப்பான காரமான பொருட்கள் அதிகம் விரும்பி உண்ணுதல், அளவுக்கு அதிகமான குளிர்பானம், டீ, காபி அருந்துதல், உடல் உழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாமல் இருத்தல் என்ற காரணங்களால் ஜீரண இயக்கத்தில் (FUNCTIONAL DISORDERS) கோளாறுகள் நிகழ்கின்றன.
இவை நோய்க்குறிகளாக வெளிப்படுகின்றன. குறிகளுக்கேற்ப மருந்துகள் அளித்தால் முழுகுணம் நிச்சயம்.
அடிக்கடி மலங்கழித்தல் – மலம் கழித்தவுடன் முழுமையாகக் கழித்த உணர்வு இல்லாமை – நக்ஸ்வாமிகா.
குமட்டலுடன் வாந்தி – இபிகாக்.
சாப்பிட்ட உணவு அப்படியே வாந்தியாதல் – பெர்ரம்மெட், நக்ஸ்வாமிகா, பல்சட்டில்லா.
அடிக்கடி மலங்கழித்தல் – நக்ஸ்வாமிகா, பல்சட்டில்லா, மெர்க்சால், பாஸ்பரஸ், போடோபைலம்.
மலச்சிக்கலும், வயிற்றுப் போக்கும் மாறி மாறி ஏற்படுதல் – ஆண்டிமோனியம் க்ரூடம், பல்சட்டில்லா, நக்ஸ்வாமிகா, போடோபைலம்.
மலச்சிக்கல் – கடினமலம் – பிரையோனியா
மிருதுவான மலத்தைக் கூட சிரமப்பட்டுக் கழித்தல் – அலுமினா
முதுகுவலியுடன் மலச்சிக்கல் – ஆஸ்குலஸ்
ஜீரணமாகாத உணவுடன் வயிற்றுப் போக்கு – சைனா
இறைச்சி மற்றும் கொழுப்பு உணவு, எண்ணெய் பண்டங்கள் சாப்பிடுவதால் அஜீரணம் – பல்சட்டில்லா
பழங்கள் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு – ஆர்சனிகம், சைனா
தன்னுணர்வின்றி மலங்கழித்தல் அல்லது வயிற்றுப்போக்கு – ஆலோ
உணர்ச்சிவசப்படுவதால் வயிற்றுப் போக்கு – அர்ஜெண்டம் நைட்ரிகம், லைகோபோடியம்
வயிற்று உப்புசம் – சைனா.
வெறும் வயிற்றில் (பசி நேரம்) வலி – அனகார்டியம், பெட்ரோலியம்
சாப்பிட்ட பின் வயிற்று வலி – அர்ஜெண்டம் நைட்ரிகம், காலிபைக், நக்ஸ்வாமிகா.
சமையல் வாசனை நுகர்ந்தாலே குமட்டல் – கோல்சிகம்
சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தவுடன் மலம் கழித்தல், வயிறு முழுவதும் நீர் நிறைந்திருப்பது போல் வெறும் நீராக, வேகமான வயிற்றுப்போக்கு ஏற்படும் – க்ரோன்டிக்
வயதானவர்களின் வயிற்றுப்போக்கு ஒரு நாள் மலச்சிக்கல், மறுநாள் வயிற்றுப்போக்கு – ஆண்டிமோனியம் குரூடம்
பால் அருந்திய பின் ஏற்படும் வயிற்றுப்போக்கு – கல்கேரியா கார்ப், நேட்ரம் கார்ப், செபியா
கீரை மற்றும் முட்டை கோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்றுப் போக்கு – பெட்ரோலியம்
மீன் சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்றுப் போக்கு – சின்னினம் ஆர்ஸ்
இவை தவிர, ஜெரேனியம், யுரேனியம் நைட், ஹைட்ராஸ்டிஸ், காக்குலஸ், பிஸ்மத், கிராபைட்டிஸ், சல்பர், பாஸ்பரஸ், ரொபீனியா போன்ற மருந்துகளும் வயிற்றுத் தொந்தரவு சார்ந்த குறிகளுக்குப் பயன்படும், எனவே IBS என்ற பெயரிலுள்ள நோய் என்றாலும் சரி வேறு பெயர்களில் உள்ள நோய் என்றாலும் ஹோமியோபதியில் நோய்களின் பெயர்களுக்கு மருந்தில்லை. ஆனால் குறிகள் அடிப்படையில் மருந்தளித்து நோயாளியை பரிபூரணமாக நலமாக்க முடியும்.
ஹோமியோபதி மருத்துவம் மனித குலம் கண்டறிந்த மருத்துவ முறைகளிலேயே மகத்தானது. மனிதனை முழுமையாகக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தாவரங்கள், பிராணிகள் போன்ற பேசாத உயிர்களுக்கும் இம்மருத்துவம் பெருந்துணை புரிவது கண்முன் நிகழும் ஆச்சரியம்.
ஆங்கில மருத்துவம் உடல்குறிகளை மட்டுமே பிரதானமாக ஆய்வு செய்கின்றது. ஒவ்வொரு குறிக்கும் ஒரு நோயின் பெயர் சூட்டி அதற்கென மருந்தளித்து நோயை அல்ல, குறியை மறைக்கின்றது. ஹோமியோபதியில் நோயின் பெயர்களுக்கு மருந்தளிக்கப்படுவதில்லை. நோயாளியின் உடல், மனக்குறிகள், அனைத்துக்கும் பொருத்தமான மருந்தளித்து நோய் எதிர்பாற்றலை அதிகரித்து உடல் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் நீக்கப்படுகின்றன. நோய்க்குறிகளை நோய்களாகக் கருதி சிகிச்சையளிக்கும் ஆங்கில மருத்துவம் நோயின் அடிப்படையை அப்படியே விட்டுவிடுகிறது.
மேலும், மனநிலைகளும், கற்பனை எண்ணங்களும், கனவுகளும் மனித உயிர் இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் என்பதால், அவற்றையும் ஹோமியோபதி கவனத்தில் கொள்கிறது. நோய்க்கு நேரடியாகச் சம்பந்தமில்லாதவை இவை என ஒட்டுமொத்தமாக இவற்றைப் புறக்கணிக்கும் ஆங்கில கருவிகளாலும் கண்டறிய முடியாத உணர்வுக்குறிகளை, மனநிலைகளை, குணநலங்களை ஹோமியோ கண்டறிந்து, இவற்றுக்கு கூடுதல் மதிப்பளிக்கிறது.
எனவே, மனிதனை முழுமையாக ஆய்வு செய்து மருந்து தரும் ஹோமியோபதியின் பெருமைகளை பெருவாரியான மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை மாற்றுமருத்துவ ஆர்வலர்கள் அனைவருக்கும் உண்டு.
••••
Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் - 9443145700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.