
பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் பிறப்புக்கும் ஹோமியோபதிக்கும் உள்ள தொடர்பு வரலாற்றுப் பதிவாகிவிட்ட ஒன்று. ராணி எலிசபெத் அவர்களுக்கு பிரசவ நாளும், நேரமும் நெருங்கிவிட்டது. பிரசவத்துக்கான றிகுறிகள் தோன்றியும் கூட பிரசவம் நடைபெறாமல் தாமதமாகிக் கொண்டே இருந்தது. கர்ப்பப்பையின் கழுத்து நெகிழ்ச்சி, விரிந்து கொடுக்கவில்லை. Rigid OS Cervix எனும் பிரச்னை. மருத்துவர்கள் கலந்தாலோசித்து விட்டு ராணியாருக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை அவசியம் என்று தீர்மானித்துவிட்டார்கள்.
எலிசபெத் ராணியாரின் மருத்துவ ஆலோசகர்களில் ஹோமியோபதி மருத்துவரும் உண்டு. ராணியாரின் பிரசவச் சிக்கலுக்கு சிசேரியன் இல்லாமல் எளிய முறையில் ஹோமியோபதி மருந்து மூலம் தீர்வு காணலாம் என்பதை தெரிவித்து, அனுமதி பெற்று ‘காலோஃபைலம்’ என்ற ஹோமியோபதி மாத்திரைகளை வழங்கிய அரைமணி நேரத்துக்குள் செர்விக்ஸ் விரிவடைந்து இயற்கையான சுகப்பிரசவம் நிகழ்ந்தது.
இதுபோன்ற அற்புத நிகழ்வுகள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரையும், உயர் வர்க்க மக்களையும் ஹோமியோபதி மருத்துவம் வசீகரித்தது. இன்றளவிலும் பிரிட்டனில் சாதாரண மக்களை விட செல்வந்தர்கள் சமூகம் (Royal Society) மற்றும் அறிவு ஜீவிகள் ஆதரவு பெற்ற மருத்துவமாகவே ஹோமியோபதி விளங்குகிறது.
இந்தியாவின் நிலை வேறு. இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்ட தலைவர்கள், ஏழை எளிய மக்களைத் திரட்டுவதற்கு ஹோமியோபதியையும் ஒரு கருவியாகவே பயன்படுத்தியுள்ளனர். மகாத்மா காந்தி ‘எனது அகிம்சா தர்மம் எப்படித் தோற்காதோ அதே போல ஹோமியோபதியும் ஒருபோதும் தோற்பதில்லை’ என்று ஹோமியோபதியை உயர்த்திப் பிடித்தார். இந்தியாவில் எண்ணற்ற தலைவர்கள், எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள் ஹோமியோபதியின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர். பிரிட்டனைப் போலன்றி இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நண்பனாய் விளங்குகிறது. உலகளவில் இரண்டாவது பெரிய மருத்துவ முறையாக ஹோமியோபதி திகழ்வது போல இந்திய மருத்துவங்களிலும் இரண்டாம் இடம் வகிக்கிறது. உலகிலேயே ஹோமியோபதி மருத்துவர்கள் அதிகம் நிறைந்துள்ள மற்றும் ஹோமியோபதி மருத்துவ நூல்கள் அதிகம் வெளிவரக் கூடிய நாடுகளில் முதலிடம் பெற்றிருப்பது இந்தியாவே.
***
எனது நண்பர் ஓர் அக்குபஞ்சர் மருத்துவர். அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். பெண்கள் நலச் சிறப்பு நிபுணர் உடனடியாக வந்து பரிசோதிக்கிறார். ‘சிசேரியன் செய்ய வேண்டியுள்ளது. உடனடியாக முன்பணமாக ரூ.15,000/- செலுத்துங்கள். மீதித் தொகையை பின்னர் செலுத்தலாம்’ என்று அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுள்ள நண்பர் ‘டாக்டர் தங்களிடம் தான் என் மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்றிருக்கிறாள். இரண்டு நாள் முன்பு கூட எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறினீர்களே! கொஞ்சம் லேட்டானாலும் பரவாயில்லை. சிசேரியன் வேண்டாம்!’ என்று கூறியதும் ‘இப்போது உள்ள நிலைமையைச் சொல்லிவிட்டேன். தாமதம் செய்யாதீர்கள். அதற்குமேல் ரிஸ்க் எடுப்பதாகயிருந்தால் நீங்கள் தான் பொறுப்பு!’ என்று டாக்டர் தெரிவித்துவிட்டு சற்றுக் கோபமாக வெளியே சென்றுவிடுகிறார்.
நண்பருக்கு ஏற்பட்ட மன நெருக்கடியை அறிந்த அவரது மனைவி அவரை அருகில் அழைத்து, ‘ஏங்க பேசாம கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போனால் என்ன?’ என்று கேட்டிருக்கிறார். நண்பர் ஒரு கணம் யோசித்துவிட்டு மணியைப் பார்த்தார். இரவு 9 மணி. ஆஸ்பத்திரி வாசலில் நின்றிருந்த ஆட்டோ டிரைவரிடம் சென்று பேசிய பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மணி 9.20. அவசரமாக இரவுப் பணியிலிருந்த பெண் மருத்துவரும், நர்சுகளும் நண்அரின் மனைவியை பிரசவ அறைக்குக் கொண்டு சென்று சிகிச்சையைத் துவங்கினர். 9.40க்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது! சிசேரியன் இல்லை! சுகப்பிரசவம்! எனது நண்பர் அதே நிமிடம் என்னை செல்பேசியில் அழைத்து ஒருவித கலக்கமும், மகிழ்ச்சியும் கலந்த மனநிலையில் என்னிடம் நடந்த விபரங்களை பகிர்ந்தார். முதலில் அவருக்கும் அவரது மனைவிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு, விபத்து போல நடந்த விஷயங்களை எண்ணி வருத்தப்பட வேண்டாம் என்று ஆறுதல்படுத்தினேன். பின்னர் அவர் இனிப்புகள் வாங்கிக் கொண்டு முதலில் சென்ற தனியார் மருத்துவமனைக்குச் சென்று தன் மனைவிக்கு உதவிய நர்சுகளுக்கும், ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியுடன் வழங்கிய செய்தியை அடுத்த நாள் தெரிவித்தார்.
***
பனிமலர் என்ற பெண் பிரசவ நாளன்று மருத்துவமனைக்கு வந்துவிட்டார். மருத்துவர் பரிசோதித்துவிட்டு குழந்தையின் தலை திரும்பவில்லை என்றும் கர்ப்பப்பை வாய் இறுக்கமாக உள்ளதாகவும் கூறி ஊசி மருந்து செலுத்திவிட்டுச் சென்றார். லேசான வலியும் மறைந்துவிட்டது. பனிமலருக்கும் அவளது அம்மா மற்றும் கணவர் அனைவருக்கும் கவலையும் பதற்றமும் தொற்றிக் கொண்டது.
பனிமலரின் சகோதரி அமுதவல்லி ஹோமியோபதி மருந்து மூலம் சிசேரியனைத் தவிர்க்க வழியிருக்கிறதா என்று நேரில் வந்து விசாரித்தார். தலை திரும்பாமல் இருக்கிறதாம். சிசேரியன் தவிர வேறு வழியில்லை என்று சொல்கிறார்கள். தங்கை ரொம்பவும் பயப்படுகிறாள்’ என்று கூறிய அமுதவல்லி சற்றே கலங்கிய விழிகளுடன் காணப்பட்டார்.
‘பல்சடில்லா’ எனும் ஹோமியோபதி மருந்தை உயர் வீரியத்தில் ஒரு பொட்டலம் கொடுத்து அரை தம்ளர் நீரில் கரைத்து 10 நிமிடத்துக்கு ஒரு முறை 1 ஸ்பூன் பரிந்துரைத்து, பயப்பட வேண்டாம் என்று கூறி அனுப்பி வைத்தேன். டாக்டர் கூறியபடி இன்னும் சில மணி நேரத்தில் சிசேரியன் செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் காற்றுமலரை (அதுதான் பல்சடில்லாவின் பெயர்) பனிமலருக்கு நீர் வடிவில் கொடுக்கத் துவங்கியுள்ளனர். ஒருமணி நேரத்தில் பனிமலரின் வயிற்றுக்குள் ஏதோ ஒருவித உணர்வை உணர்ந்தவுடன் கருப்பையின் வாய்ப்பகுதியும் (Cervix) திறந்து தலை வெளிவரத் துவங்கிவிட்டது. மருத்துவர் வரத் தாமதமாகும் என்பதால் சீனியர் நர்சுகளே பிரசவம் பார்த்துவிட்டனர். பூத்த பூவாய் ஒரு பெண் குழந்தை இயற்கையாய் பிறந்துவிட்டாள். பின்னர் பார்வையிட வந்த மருத்துவர் ‘இது எப்படி நடந்தது? வாய்ப்பே இல்லையே!’ என்று விசாரித்துச் சென்றிருக்கிறார்.
***
மருத்துவ உலகின் சுயநலமிக்க பேராசைக்கு நம் தாய்மார்களின் உடல்நலம் பலி இடப்படும் மனித நேயமற்ற கொடுமை எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. எந்த கர்ப்பிணிப் பெண்ணும் தப்பித்துவிட முடியாது!
பிரசவத்தின் போது குழந்தையின் தலை முதலில் வெளிவரும் என்றால் அதனை Vertex அல்லது Cephalic Presentation என்று அழைக்கின்றனர். முகம் மற்றும் புருவங்கள் முதலில் வெளிவருமானால் அதற்கு Bron அல்லது Face Presentation என்று பெயர். தலை தவிர, கைகளோ, கால்களோ, புஜங்களோ முதலில் வெளிவரும் நிலை Breech Presentation என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்றாம் நிலையைத் தான் தற்போது சிசேரியன் செய்வதற்கு அடிப்படையாகக் கருதுகின்றனர்.
இதைத் தவிர சிசேரியனுக்கான வேறு சில பல உடலியல் காரணங்களையும் ஆங்கில மருத்துவம் பட்டியலிடுகிறது.
கருவில் உள்ள குழந்தையின் கழுத்தைக் கொடி சுற்றிக் கொள்ளுதல் (Cord Prolapse)
தாய்மைக் கால நச்சுத் தன்மைகளின் காரணமாக கர்ப்பகால, பிரசவ நேர வலிப்பு (Eclampsia), ரத்த அழுத்தம் அதிகரிப்பு, மயக்கம்
நச்சுக் கொடி கருப்பையின் உட்புற மேல்குழிச் சுவரில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு மாறாக அடிப்புறமிருந்து ஒட்டிக் கொண்டிருக்கும் போது பிரசவத்துக்கு முன்பே ரத்தக் கசிவு ஏற்படுதல் (Placenta Pravea – Types III & IV)
கர்ப்பப்பையிலேயே குழந்தை இறந்து பிறக்கும் நிலை (Still born baby)
கர்ப்பிணித் தாய்க்கு இதய நோய் அல்லது சர்க்கரை நோய் இருத்தல்.
35 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைதல்
பிரசவ வலி தாமதம் ஏற்படுதல்
பனிக்குடநீர் (Amniotic Fluid) அளவு மிகக் குறைவாக இருத்தல்
இவை போன்ற அலோபதி மருத்துவம் கூறும் பல காரணங்களோடு ஹோமியோபதி மருத்துவம் முரண்படுகிறது. அவற்றுக்கு எளிய நம்பகமான தீர்வுகளை வழங்கி சுகபிரசவங்களை நிகழ்த்தி உலகம் எங்கும் அன்றாடம் நிரூபணம் செய்து கொண்டிருக்கிறது.
***
கர்ப்ப கால உபாதைகளுக்கும் பிரசவ நேரச் சிக்கல்களுக்கும் ஹோமியோபதியில் பல்சடில்லா, காலோபைலம் போல பல மருந்துகள் நிகரற்ற பலன்களைத் தருகின்றன. உதாரணத்துக்கு சில…
பிரசவத்துக்கு முன் பயம், பதற்றம், அமைதியின்மை – அகோனைட், ஜெல்சியம்.
குழந்தை கருப்பையில் குறுக்காக இருந்தால் (Traverse Lie) – ஆர்னிகா, பல்சடில்லா
பிரசவ நேரம் வலிப்பு – ஹையாஸியாமஸ், சாமோமில்லா
கருப்பை வாய் விரிவடையாமை – காலோபைலம், சிமிசிபியூகா
தாய்க்கு காற்றுப்பசி – கார்போவெஜ்
பிரசவத்திற்குப் பின் வலி, காயம் – ஆர்னிகா
நஞ்சுப்பை வெளியேற்ற உதவும் மருந்துகள் – காந்தாரிஸ், சீகேல், பைரோஜின்
டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் நாவலில் வரும் ஒரு பேதைப் பெண் ‘பிரசவம்’ என்பதை ‘மரணதண்டனை’ போல் மனத்தில் எண்ணிப் பயந்து கொண்டே இருப்பாள். அவள் இறுதியில் பிரசவிக்கும் போது மரணம் அடைகிறாள். கர்ப்பிணிகள் நெஞ்சில் தைரியமும் நம்பிக்கையும் நிறைந்திருப்பதே நல்லது. அத்துடன் ஹோமியோபதி மருத்துவத்தை சார்ந்திருப்பது முற்றிலும் நல்லது; பாதுகாப்பானது.
••••
Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் - 9443145700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.