

கருத்தரித்து 28 வாரங்களுக்கு முன்பாகவே வளர்ச்சி தடைப்பட்டு கரு இறந்து வெளியேறுவதைக் கருச்சிதைவு (Abortion) என்றும், 40 வாரங்களுக்கு முன்பாக கரு வளர்ச்சி தடைப்பட்டுக் கரு இறப்பதைக் குறைப்பிரசவம் (Premature Labour) என்றும் அழைக்கிறோம். கருவுற்ற பெண்களில் 4 பேர்களில் தெரிவிக்கிறது. கருச்சிதைவிற்கான முக்கிய காரணங்களையும் தவிர்க்கக் கூடிய வழி வகைகளையும், சிகிச்சை விவரங்களையும் பெண்கள் (குறிப்பாக ஒவ்வொரு தம்பதியரும்) ஓரளவேனும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
கர்ப்பப்பை அமைப்பில் ஏற்படக்கூடிய ஒரு சில மாற்றங்கள் கருச்சிதைவுக்கு வழி வகுக்கின்றன. இயற்கையாகவே பெண்களின் கர்ப்பப்பை சற்று முன் கவிழ்ந்து (Anteverted) அமைந்துள்ளது. சில பெண்களுக்கு மட்டும் பின் கவிழ்ந்து (Retroverted) அமைந்திருக்க கூடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கரு வளரும் போது முதல் மூன்று மாதங்களுக்கு (12 வாரங்களுக்கு) உடலுறவு கொண்டால் கருச்சிதைவு ஏற்பட நேரிடும். மற்றபடி பொதுவான அனைத்து கர்ப்ப நிலைமைகளிலும் சற்று கவனத்துடன் உடலுறவு கொள்ளலாம். கருச்சிதைவு ஏற்படாது.
சில பெண்களுக்குக் கர்ப்பப்பையில் வடிவமைப்பு இயற்கைக்கு மாறாக இருக்கக் கூடும். கர்ப்பப்பையின் நடுவில் தசை வளர்ச்சி முழுமையாகவோ, பாதியாகவோ இருந்தால் (Septate Uterus) கர்ப்பப்பை இருபாகங்களாகப் பிரிந்திருந்தால் (Bicarmuate Uterus) கரு 10 மாதம் வரிஅ நீடித்து வளர்ச்சி பெற இயலாது. இடையிலேயே கருச்சிதைவு நிகழ்ந்து விடும். சில பெண்களுக்கு கரு வளரும் போது நீர்க்குடத்தில் (Amniotic Cavity) அதிகமான நீர் சேர்ந்து விடும். இதை Acute-Hydrominos என்றழைப்பார்கள். இதன் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படலாம்.
கர்ப்பப்பையிலுள்ள கருவின் அணுக்களில் இயற்கைக்குப் புறம்பான அமைப்பின் குரோசோம்கள் தோன்றியிருந்தால் 8 வாரங்களிலேயே கருச்சிதைவு நிகழ்ந்துவிட வாய்ப்புள்ளது. மீறி வளர்ந்து குழந்தை பிறந்துவிட்டால் பலவகைப் பிறவிக் குறைபாடுகளுடன் காணப்படும். சிலவகைக் கர்ப்பப்பை கட்டிகள் (Submucous Fibromyoma) இருக்கும் வரை கருச்சிதைவு நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு.
ஹார்மோன் காரணங்களாலும் கருச்சிதைவு நிகழ்கிறது. கருவுற்ற சினைமுட்டை (Fertilised Ovum), கப்பப்பையில் பதிய வேண்டும். சினிஅப்பையிலுள்ள (Ovary) கார்பஸ் லூடியம் (Corpus Lutcm) ஆரோக்கியமான நிலையில் இயல்பாகப் பணிபுரிய வேண்டியது மிகவும் அவசியம். இச்சுரப்பிகளின் பணிகளில் குறைபாடு ஏற்படுமானால் 12 வாரங்களுக்குள் கருச்சிதைவு நிகழக்கூடும்.
குறிப்பிட்ட சில நோய்களும் உடல் பலவீனங்களும் கருச்சிதைவுக்குக் காரணமாக அமையக்கூடும். டைபாய்டு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்கள் கர்ப்பிணிகளைத் தாக்கும் போது தாயைத் தாக்கிய அதிக வெப்பத்தால் (அதிக காய்ச்சலால்) கருவையும் பாதிக்கும் – இறந்துவிடும். மஞ்சள் காமாலை, தட்டம்மை, எய்ட்ஸ், சிபிலிஸ் போன்ற வியாதிகளில் சம்பந்தப்பட்ட நோய்க் கிருமிகள் கர்ப்பிணிகளிடமிருந்து தொப்புள் கொடி வழியாக கருவுக்குச் சென்று கருச்சிதைவு ஏற்படுத்த வாயப்புள்ளது. கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை, மிகை ரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக அலர்ஜி இருக்குமானாலொ நச்சுக் கொடிப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் கருவுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்படும்.
கார், பஸ், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களில் பயணம் செய்வதால் அதிர்வுகள் காரணமாக சிலருக்கு கருச்சிதையக் கூடும். ரயில் பயணமே பாதுகாப்பானது. கர்ப்பிணிகள் உடல் நிலையை மட்டுமின்றி மனநிலையையும் நன்கு வைத்துக் கொள்ள வேண்டும். பயம், பதற்றம், குழப்பம், வேதனை, உணர்ச்சிவசப்படுதல் ஆகிய காரணங்களால் கூட கருச்சிதைவு ஏற்படக்கூடும். 12 வாரத்திற்குள் தாயின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்தால் Xகதிர்கள் கருவின் உள் அமைப்பை பாதிக்கக்கூடும். பிறவி ஊனங்களை உண்டாக்கலாம். சிலருக்கு கருச்சிதைவு ஏற்படலாம். (நுண் ஒலி ஸ்கேன் (Ultra Sound Scan) பரிசோதனையில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பில்லை) கர்ப்பினீகள் அதிகளவு புகைபிடிப்பதால் – நிக்கோடின் நச்சு காரணமாகவும் கருச்சிதைவுக்கு வாய்ப்பு உள்ளது. கர்ப்பகாலத்தில் அடி வயிற்றில் பலமாக அடியோ, காயமோ ஏற்பட்டு விட்டால் பெரும்பாலும் கருச்சிதைவு நிகழ்ந்துவிடுகிறது.
கருச்சிதைவில் பலவிதங்கள் உள்ளன. கர்ப்பப்பை கழுத்து மூடியுள்ள நிலையில் பிறப்புறுப்பு வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டு அச்சுறுத்தும் கருச்சிதைவு threatnened Abortion எனப்படும். கருச்சிதைவு ஏற்பட்டே திரூம் என்கிற தடுக்க முடியாத – தவிர்க்க முடியாத கருச்சிதைவு Inevitable Abortion எனப்படும். கருச்சிதைவில் கருவுற்ற பொருள் அனைத்தும் வெளியே வந்துவிட்டால் அது Complete Abortion எனப்படும். கருவின் ஒரு பகுதி அல்லது இதர கழிவு கர்ப்பப் பையில் தங்கிவிடும். அது அரைகுறைக் கருச்சிதைவு Incomplete Abortion எனப்படும். கருவுற்ற போதெல்லாம் கருச்சிதைவு ஏற்படும் வழக்கம் வழக்கமான கருச்சிதைவு Habitual abortion எனப்படும். மருத்துவக் காரணமின்றி, மருத்துவ ஆலோசனையின்றி செய்யப்படும் கருச்சிதைவு Criminal Abortion என்றும், கர்ப்ப அறிகுறிகள் ஏற்பட்டு பின்னர் மறைந்து கருவின் உயிர் பிரிந்தும், வெளியேறாமல் தங்கிவிட்ட நிலையிலுள்ள கருச்சிதைவு Miseed abortion என்றும், கருக்குழலில் கருவுற்று இறந்து வெளியேறும் கருச்சிதைவு Tubal Abortion என்றும் அழைக்கப்படுகிறது.
கருச்சிதைவு அடிப்பட்டதால், அதிக உழைப்பால், தேவையற்ற பயணத்தால், அதிர்ச்சியால், நோய்களால் வேறு சில காரணங்களால் ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தாமதமின்றி ஹோமியோபதி சிகிச்சை மேற்கொண்டால் கருச்சிதைவை தடுக்க முடியும். கருவுற்றுள்ள பெண்ணின் மனநிலை, உடல்நிலை குறிகள், கருச்சிதைவு தோன்றுவதற்கான முன் அறிகுறிகள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஹோமியோபதி மருந்து தேர்வு செய்து சிகிச்சை அளிக்கப்பட்டால் தாயும் சேயும் பாதுகாக்கப்படுவார்கள். குழந்தையின் வளர்ச்சியும் பாதிக்காது. குறைபாடுகளும் ஏற்படாது. நலமான குழந்தையின் சுகமான பிரசவம் மூலம் பெற முடியும். அதற்கு உதவக் கூடிய சில முக்கிய ஹோமியோபதி மருந்துகள் பின்வருமாறு –
கர்ப்ப காலப் பிரச்னைகளுக்கு உதவும் ஹோமியோ மருந்துகள் :
அகோனைட் – பயம் காரணமாக கருச்சிதைவுக்கான அறிகுறி தோன்றினால் உடனடியாக இம்மருந்தை நீரில் கலந்து (Water dose) 15 நிமிடங்களுக்கு 1 முறை வீதம் நிவாரணம் கிட்டும் வரை கொடுத்தால் பலன் கிடைக்கும்.
ஆர்னிகா – விபத்து, காயம், அதிர்ச்சி காரணமாக ஏற்படக்கூடிய கருச்சிதைவைத் தடுக்க உதவுகிறது. அடிக்கடி அதிகளவு உடலுறவு காரணமாக கருச்சிதைவு ஏற்படுமாயின் தடுக்க இம்மருந்து உதவும்.
அபிஸ்மெல் & காலிபார்ப் – ஆரம்ப மாதங்களில் (2,3,4 மாதங்களில்) ஏற்படும் கருச்சிதைவை தடுக்கும்.
சபீனா – முதல் 3 மாதங்களில் ஏற்படும் அச்சுறுத்தும் கருச்சிதைவுக்கு சிறந்த மருந்து.
செபியா – 5 லிருந்து 7 மாதம் வரையிலான கருச்சிதைவைத் தடுக்கும்.
டி.என்.ஏ.1 M – 2 மற்றும் 7-ம் மாதங்களில் ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்க உதவும்.
வைபூர்ணம் ஒபுலஸ், வைபூர்னம் புருனிபோலியம் – வழக்கமான கருச்சிதைவைத் தடுக்கவும் பயன்படும் சிறந்த மருந்துகள், பொதுவாக வைபூர்ணம் புரூனிபோலியம் எந்த மாதத்தின் கருச்சிதைவைத் தடுக்கவும் பயன்படும். குறிப்பாக 8-வது மாதக் கருச்சிதைவைத் தடுத்திட உதவும். (இந்நிலையில் கர்ப்பமுற்ற பெண்ணை படுக்கையிலிருக்கச் செய்வதும், முழு ஓய்வு பெறச் செய்வதும் அவசியம்)
அலட்ரிஸ் பாரினோசா – கர்ப்பப்பை பலவீனம், சோகை காரணமாக ஏற்படும் வழக்கமான கருச்சிதைவை (Habitual Abortion) தடுக்க உதவும்.
தைராய்டினம் – கருச்சிதைவையும், குறைப்பிரசவத்தையும் தடுக்கிறது. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் அச்சுறுத்தும் கருச்சிதைவை (Threatened Abortion) தடுக்கும். கர்ப்பப்பையிலிருந்து வரும் மெதுவான ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தும்.
சிமிசிபியூகா, வைபூர்ணம் ஒபுலஸ் – கர்ப்ப காலத்தில் இடையிடையே கொடுத்தால் கருச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கும் சுகப்பிரசவம் நிகழும்.
குரோக்கஸ் சடீவா – மனக்கிளர்ச்சியால் முதல் மாதத்திலேயே ஏற்படக்கூடிய கருச்சிதைவை தடுக்கக்கூடியது.
பிளம்பம், ஆரம் மூரியாடிக், நேட்ரம் – பின்கவிழ்ந்த நிலையிலுள்ள கர்ப்பப்பையில், 3,4 மாதங்களில் கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப மேலும் கர்ப்பப்பை விரிவடையாமல் போவதால் கருச்சிதைவு ஏற்படுவதை இம்மருந்துகள் தடுக்கின்றன.
Dr.S. வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர்,
செல் – 94431 45700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.