33.வாசமில்லா மலரிது!

நாராயணனுக்கு வந்த துன்பம் யாருக்கும் வரக் கூடாது. இது அவரே அவ்வப்போது
33.வாசமில்லா மலரிது!

நாராயணனுக்கு வந்த துன்பம் யாருக்கும் வரக் கூடாது. இது அவரே அவ்வப்போது சொல்லி வந்த மனக்குமறல் தான். 42 வயதான நாராயணன் சாலையோர டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டர். 20 வருட அனுபவம். அனுபவம் கூடக் கூட மதிப்பு, மரியாதை, சம்பளம் எல்லாம் கூட வேண்டும். நாராயணனுக்கு அது எதிர்மறை. ஏற்கனவே இரண்டு, மூன்று டீக்கடைகளிலிருந்து வேலையை விட்டு அனுப்பப்பட்டுள்ளார்.

வாடிக்கையாளர்களிடமிருந்து அவர் மீது தினமும் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. டீ கிளாசில் மண்ணெண்ணெய் வாசனை இருந்தால் கூட நாராயணனுக்குத் தெரியவில்லை. வாடிக்கையாளர்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது. அப்போதும் கூட முகர்ந்து பார்த்தால், அவர் நாசிக்கு எந்த வாசனையும் பிடிபடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தன் பிரச்னையை உன்னிப்பாகக் கவனித்து வந்தார். தினமும் அருகில் வடை சுட்டுக் கொண்டிருக்கும் போது வாசனை தெரியவில்லை. புகையின் நெடி கூட உணர முடியவில்லை. வீட்டில் சமையல் வாசனை இல்லை. சாப்பிடும் போது குழம்பும், காய்கறிகளும் மணக்கவில்லை. நாளடைவில் அவற்றில் ருசியும் இல்லாதது போல் ஆகிவிட்டது.

முதலில் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனைகளிலும் காது மூக்குத் தொண்டை நிபுணர்களிடம் ஒரு வருட காலமாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போதிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தனக்கு வந்திருக்கும் விபரீதமான நோய் குணப்படுத்த முடியாத ஒன்று என்ற மனநிலைக்கு வந்த பின்னர் தன்னை நம்பி வாழும் குடும்பத்தை எண்ணி மனத்திற்குள் மருகினார். அவரது நீண்ட கால நண்பரான பழக்கடை பழனிச்சாமியின் ஆலோசனையின் படி ஹோமியோபதி சிகிச்சைக்கு வந்தார்.

அவரது துயரை – உடல்ரீதியான, மனரீதியான பாதிப்புக்களை தெளிவாக விசாரித்தறிந்த பின் அவருக்கு ‘பல்சடில்லா’ என்ற ஹோமியோ மருந்து வழங்கப்பட்டது. இரண்டு வார சிகிச்சையில் ஓரளவு வாசனையை உணர முடிவதாகக் கூறி மகிழ்ச்சி அடைந்தார். உணவின் சுவையும் தென்படத் துவங்கியது. மெல்ல மெல்ல அவரது உள்ளத்தினுள் நம்பிக்கை வெளிச்சம் பரவத் துவங்கியது. மூன்று மாத சிகிச்சைக்குப் பின் அவருக்கு முழுமையான வாசனைத் திறன் மீண்டும் வந்து விட்டது. மனைவியுடன் வந்து கலங்கிய கண்களுடன் கும்பிட்டு நன்றி தெரிவித்துச் சென்றார்.

**

ஷேக்ஸ்பியரின் ‘மாக்பெத்’ காவியத்தில் (Act 5, Scene 1, Page 3) மாக்பெத் உணர்ச்சிப் பெருக்கோடு கூறும் வசனம் இது ‘Here is the Smell of the blood still All the perfumes of Arabia will not sweeten this little hand. Oh. Oh.Oh!’’ டன்கன்பிரபு கொல்லப்பட்டு நீண்ட காலத்திற்உப் பிறகும் கைகளில் ரத்த வாடை அடித்துக் கொண்டே இருக்கிறது. இது மனநிலை சார்ந்த பிரமையாக (Delusion) இருக்கலாம். அல்லது நுகர்வுத் திறன் சார்ந்த கோளாறாக (Smelling Disorder) இருக்கலாம்.

ஆம்! எத்தனை எத்தனையோ நுகர்வுத்திறன் பாதிப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் வாசனையிழப்பு நோய். இயல்பான நுகர்வுத் திறன் உள்ளவர் 10000 வாசனைகளை அறிய முடியும். இதில் தடை ஏற்பட்டால் மனச்சோர்வும், பதற்றமும் ஏற்படும். உணவும் சுவைக்காது. சுவைக்காத உணவாக உண்பதால் சத்து கிரகிப்பும் குன்றி விடும். கெட்டு விட்ட உணவு, நெருப்பின் புகை, இதர வாசனைகளை அறிய முடியாத நிலை ஆபத்தானது.

ஆண்டுதோறும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் நுகர்வுத் திறன் பாதிப்புகளுக்காக ஆங்கில மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். எத்தனை சதவிகிதமானோர் குணமாகின்றனர் என்பது தான் ஹோமியோபதியினர் எழுப்பும் கேள்வி. Smelling Disorders எனப்படும் கோளாறுகள் வயதானால் அதிகரிக்கிறது. பெண்களை விட ஆண்களிடம் அதிகம் காணப்படுகிறது. 60 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்ட ஆண்களில் நுகர்வு பாதிப்புகள் 25 சதவிகிதத்தினரிடம் பெண்களின் 11 சதவிகிதத்தினரிடமும் காணப்படுவதாக ஓர் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

Smelling Disorders பலவகைகளாக உள்ளன. Hyposmia (குறைந்த வாசனைத் திறன்), Hyperosmia (அதீத நுகர்வுத் திறன்), ஹிஸ்டீரியா / நரம்பியல் பாதிப்புகளால் ஏற்படுவது) Dysomia (மோசமான வாசனை உணர்வு – Perversion of the Sense of Smell – யதார்த்தத்துக்கு புறம்பானது) Parasomia (யதார்த்தத்தில் உள்ள..மோசமான வாசனை வேறொரு வாசனியாகத் தெரிதல்) Anosmia (வாசனைத் திறன் முற்றிலும் இல்லாமை – Inability to detect odours இந்நோயி உடன் நிகழ்வாக சுவையுணர்வும் பறிபோக நேரிடும்) இத்தனை வகைகளுக்கும் ஹோமியோபதியின் சிகிச்சைகள் உள்ளன என்பது சிறப்புச் செய்தி.

**

அழகான மூக்கினுள் இத்தனை ஆபத்துக்களா? என்று வியக்கும் அளவுக்கு மூக்கு சார்ந்த நோய்கள் ஏராளம் உள்ளன. சளி, தடுமம், தும்மல் போன்றவை எல்லா மருத்துவ முறைகளும் எதிர்கொள்கிற பொது நோய்கள். வாசனை உணர்வு அற்றுப் போனால்? பல மருத்துவ முறைகள் பலன் அளிக்காமல் போனால்? வாழ்வின் போக்கு எப்படி இருக்கும்? அபத்தமாக, ஆபத்தாக அல்லவா இருக்கும்! சாக்கடையின், குப்பை லாரியின் துர்நாற்றமும் தெரியாது! சந்தனம், கற்பூரத்தன் நறுமணமும் தெரியாது! மோப்ப உணர்வு குறைந்து விட்டால் நாவின் சுவை உணர்வு மொட்டுக்களால் எல்லாச் சுவைகளையும் உணர முடியாது. உணவு சப்பென்றிருக்கும். மணத்திற்கு காரணமான மூலக் கூறுகள் காற்றுவழி கடந்து நாசி புகுந்து,உட்புற ஆழம் சென்று வாசனை உணர்வு செல்களை (Olfactory Cells, Olfactor nerves, Brain) ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றில் பிரச்னை என்றாலும் வாசனை இழப்பு ஏற்படுகிறது.

சளி, தடுமம், ஒவ்வாமை நீர் ஒழுக்கு போன்ற பாதிப்புக்களால் மூக்குப் பாதையிலுள்ள பூந்தசைகள் பாதிக்கப்பட்டு வாசனையிழப்பு ஏற்படக் கூடும். இது தற்காலிகமானது. மூக்கினுள் ஏற்படும் சில அடைப்புக்களாலும் (Septum Deviation – எலும்பு மாறுபாடு, Polyp – சவ்வு வளர்ச்சி) வாசனை பாதிப்பு ஏற்படக் கூடும்.

தவிர முதுமையின் காரணமாக ஏற்படும் அல்சீமர், பார்க்கின்சன் போன்ற நோய் நிலைகலிலும் நாட்பட்ட நீரிழிவிலும் நரம்புகள் பாதிக்கப்படுவதால் வாசனைத் திறனும் பாதிக்கபட்டலாம். சிலருக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை காரணமாக, ரேடியம் கதிர் சிகிச்சை காரணமாக, சில வகை ஆங்கில மருந்துகளின் பக்க விளைவு காரணமாக வாசனைத் திறன் பாதிக்கபடலாம். ‘Treat the patient not the disease’ என்ற ஹோமியோபதி அணுகுமுறையின்படி ஆய்வு செய்து, அடிப்படைக் காரணம் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மூக்கு நோய்களுக்கு முழு நிவாரணம் நிச்சயம்!

Dr.S. வெங்கடாசலம்

மாற்று மருத்துவ நிபுணர்

சாத்தூர்,

செல் – 94431 45700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com