தீராத தோல் நோய்களுக்குத் தீர்வு

உள்ளுறுப்புகள் புற பாதிப்புகளால் தாக்கப்படாமல் காக்கும் கேடயமே தோல்
தீராத தோல் நோய்களுக்குத் தீர்வு
Published on
Updated on
3 min read

தோல் எனும் போர்வை

உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரியது தோல். உள்ளுறுப்புகள் புற பாதிப்புகளால் தாக்கப்படாமல் காக்கும் கேடயமே தோல். இதன் பரப்பளவு 2 சதுரமீட்டர். உடல் எடையில் 16 முதல் 20 சதவிகிதம் வரை தோலின் எடை உள்ளது. தோலின் மீது சுமார் 2 மில்லியன் வியர்வைச் சுரப்பிகள் அமைந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 500 மி.லி. 600 மில்லி வரை வியர்வை சுரக்கிறது. இதுவரை உலகில் கண்டறியப்பட்டுள்ள தோல் நோய்கள் 600க்கும் மேல் உள்ளன.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தட்பவெப்ப மாறுபாடுகள் வெவ்வேறு கலாச்சாரம், உணவுப் பழக்கம், மாறுபட்ட எத்தனையோ அக, புற அம்சங்கள் மாறுபடுவது போல தோல் நோய்களும் நபருக்கு நபர் இடத்துக்கு இடம் மாறுபட்டுக் காணப்படுகின்றன.

உள்ளே வெளியே

சாதாரணமாகத் தோலின் புறக்குறிகள் மறைந்தால் போதும் என்று ஆங்கில மருத்துவம் கருதுகிறது. அதனையே வெற்றிகரமாகச் செய்து விடுகிறது. ‘அக்குறிகள் எங்கே சென்றன? என்பதே ஹோமியோபதி எழுப்பும் அர்த்தமுள்ள வினா. உள்முகமாய் அவை திருப்பி விடப்பட்டுள்ளன என்பதே உண்மையான பதில்.

தோலின் உபாதைகள் (அரிப்பு முதல் சோரியாஸிஸ் எனப்படும் செதில் படை நோய் வரை) உடலின் உள் ஒழுங்கு அமைப்பில் அல்லது உயிராற்றலில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் வெளிப்பாடு. இதுதான் ஹோமியோபதியின் பார்வை. அதனால் தான் வெளிப்புற (தோல்) நோய்க்கு உள்மருந்து தரப்படுகிறது.

அழகுசாதனப் பொருட்களும், தோல் நோய்க்கான ஆங்கில மருந்துகளும் நண்பர்களா? எதிர்களா?

தோல் புறப்பாடுகள் (Skin Eruptions) என்பவை எதைக் காட்டுகின்றன? மனித உடலின் தற்காப்பு மண்டலத்தின் (Defense system) அழகிய போராட்டத்தை! பிறப்பிலேயோ அல்லது அதற்குப் பின்னரோ உடல் அமைப்பினுள் தோன்றிய சில நச்சுகளை அகற்றுவதற்கான இயற்கையான முயற்சிகளின் பிரதிபலிப்பை! உடலின் வேறெந்த உறுப்பையும் விட தோலின் மூலம் எளிதில் உடல், மனப் பாதிப்புக்களின் பிராதிபலிப்பைத் துல்லியமாகவும் விரைவாகவும் புரிந்து கொள்ள முடியும்.

பெரும்பாலான எவ்விதப் பயனுமற்ற, ஆரோக்கியக் கேடான அழகு சாதனத் தயாரிப்புக்களைத் தான் பொதுமக்கள் தோலுக்கு நன்மை தரும் என நம்பி பயன்படுத்துகின்றனர். கார்டிசோன் போன்ற ஸ்டீராய்டுகள், Antibiotics, Antifungals, Antihistanis மற்றும் பல Cosmetics அழைக்கப்படும் அழகு சாதனப் பொருட்கள் அனைத்தும் ரசாயனங்களும் நச்சுகளும் உள்ளடங்கியவை.

மூலிகை மற்றும் ஹோமியோபதி வெளிப்பூச்சுகள் ஓரளவு பயன் அளிக்கின்றன. ஹோமியோபதி உள் மருந்துகள் உடலின் தற்காப்பு மண்டலத்திற்கு உதவுகின்றன. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கின்றன. அதுமட்டுமின்றி தவறான சிகிச்சைகளால் தோல் நோய்கள் உள் அமுக்கப்பட்டதன் (suppression) காரணமான விளைவுகளையும் ஆபத்துக்களையும் தவிர்க்க உதவுகின்றன.

ஆஸ்துமா நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் போது முன்பு உள்ளமுக்கப்பட்ட ECZEMA எனப்படும் கரப்பான் படை திரும்பத் தோன்றலாம். இது நலமாக்களின் திசையைக் காட்டுகிறது. தொடர் சிகிச்சையில் ஆஸ்துமா, எக்சிமா இரண்டு நோய்களும் ஒருசேரக் குணமாகின்றன. ஆங்கில மருத்துவத்தில் இது வெறும் கனவு!

தோல் நோய்களுக்கு ஹோமியோ தீர்வுகள்

தோல் உடலின் ஒரு பாகம் தான். எனினும் பாதிக்கபட்ட மனிதனின் ஒட்டுமொத்த அகத்தையும் புறத்தையும் ஆய்வு செய்வது ஹோமியோ சிகிச்சைக்கு அவசியம். ஹோமியோபதி கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த டாக்டர்.ஹானிமன் எழுதிய ஆர்கனான் நூலில் உள்ள 185 முதல் 203 வராஇயிலான மணிமொழிக் குறிப்புகள் தோல் நோய் சிகிச்சைக்கு வழிகாட்டுகின்றன.

முகப்பரு, முடி உதிர்தல், பொடுகு, சிரங்குகள், சீழ் கட்டிகள் (Boils) சீழ் கொப்புளங்கள் (Abscess), நீரிழிவுப் புண்கள், மருக்கள், பாலுண்ணிகள், கால் ஆணிகள், தோல் நிற மாற்றங்கள், வெண் திட்டு, வட்டப்படை, அதிவியர்வை, அரிப்பு, ஒவ்வாமை, எக்சிமா, சோரியாஸிஸ் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஹோமியோபதிச் சிகிச்சை மூலம் முழுமையாக குணமாகின்றன. பக்கவிளைவு இல்லாமல், மீண்டும் நோய் தலை தூக்காமல் வேரோடும் வேரடி மண்ணோடும் தோல் வியாதிகளை அகற்றும் ஆற்றல் ஹோமியோபதி மருத்துவத்திற்கு உண்டு. தோல் நோய் சிகிச்சைக்கு நூற்றுக்கணக்கில் சிறப்பான ஹோமியோபதி மருந்துகள் அணிவகுத்து நிற்கின்றன என்பது அனைவரும் அறிய வேண்டிய விஷயம்.

தோல் அரிப்பு (skin itching) கூட ஆங்கில மருத்துவத்தில் பல ஆண்டு தொடர் சிகிச்சைக்குப் பின்னரும் நீடித்துத் துயரமளிப்பதைக் காணலாம். ஹோமியோபதியில் அரிப்பு உபாதை உள்ளவர்களுக்கு வெவ்வேறு விதமான மருந்துகள் பயன்படுத்தி விரைவான முழுமையான நலம் அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு சில மருந்துகள் மற்றும் அவற்றின் அறிகுறிகள் பற்றிப் பார்ப்போம்.

சல்பர் – தாங்க முடியாத அரிப்புடன் எரிச்சல் / சுகமான அரிப்பு, இன்பமாகச் சொறிந்தபின் கடும் எரிச்சல் / விரல்களுக்கு இடையில் அரிப்பு / ஆசனவாய் அரிப்பு + எரிச்சல்

சோரினம் – தாங்க முடியாத அரிப்பு – (குறிப்பாக இரவில்) படுக்கை உஷ்ணத்தால் அரிப்பு அதிகரிக்கும் / காதுக்குள் அரிப்பு

மெசிரியம் – உடல் முழுவதும் ஆயிரக்கணக்கான பூச்சிகள் மொய்த்து உணர்வது போல் தீவிர அரிப்பு, சொறிந்த பின் நிவாரணம், பின்னர் வேறு இடத்தில் அரிப்பு

டியூபர்குலினம் – தோல் அரிப்பும் ஆஸ்துமா போன்ற சுவாச நோயும் மாறி மாறி ஏற்படுதல்

அலுமினா – உடல் முழுவதும் அரிப்பு, ரத்தம் வரும் வரை சொறிதல், படுக்கைச் சூட்டினால் அரிப்பு அதிகரிக்கும். ஆரம்பத்தில் தோல் சினைப்புகள் ஏற்படாது, பின் ஏற்படும். வியர்க்காது

நேட்ரம்மூர் – தொடைகளின் இடையில் அரிப்பு

குரோட்டன்டிக் – விரைப்பையில் அரிப்பு

ரஸ்டாக்ஸ் – தாங்கமுடியாத அரிப்பு (வெந்நீர்ப்பட்டால் குறையும்) முடி நிறைந்த பகுதிகளில் (Hairy Parts) அரிப்பு

லைசின் – பிறப்புறப்பு மேட்டுப்பகுதி முடியில் அரிப்பு

அம்ப்ரா கிரீசா – பெண் உறுப்பு அரிப்பு

அய்ரோடனம் – உடலின் வெவ்வேறு பாகங்களில் சிவந்த தன்மையுடன் அரிப்பு + எரிச்சல் _ தோலுரிதல்

ரூமைக்ஸ் – ஆடைகளைக் களையும் போது உக்கிரமான அரிப்பு

பாரிடா கார்ப் – முதியோர்களுக்கு ஏற்படும் அரிப்பு

மெடோரினம் – அரிப்பைப் பற்றி நினைத்தால் அரிப்பு

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

செல் : 9443145700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com