சுடச்சுட

  
  Banaras-ki-Lassi

   

  உடலிற்குத் தேவையான பல வகை ஊட்டச்சத்துகளை வழங்கக்கூடியது பால் மற்றும் அதிலிருந்து பெறக்குடிய உணவுப் பொருட்கள், அவற்றில் மிக முக்கியமான ஒன்று தயிர். புரதச்சத்து, வைட்டமின், கால்சியம் போன்ற சத்துகளை தரவல்ல தயிரில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்று அறிவீர்களா?

  பாலில் இருக்கும் புரதச்சத்தை விடத் தயிரிலிருக்கும் புரதச்சத்தை நமது உடல் விரைவாகச் செரிமானம் செய்யும். ஐயோடின், ஜின்க், வைட்டமின் பி12 போன்ற பல ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ள தயிர் எந்தெந்த வகையில் எல்லாம் நமக்கு மருந்தாய் செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

  சருமத்தைப் பாதுகாக்கும்:

  சூரியஒளி, சுற்றுச்சூழல் மாசு மற்றும் வயது காரணமாக தோலில் வரக்கூடிய பல்வேறு பிரச்னைகளை தயிரின் உதவியால் சரி செய்துவிடலாம். தயிர் நமது தோலை சுத்தப்படுத்தி ஆரோக்கியமான மற்றும் ஒளிறும் சருமத்தை தரும். தயிரில் கடலை பருப்பு மாவைக் கலந்து பூசினால் முகப்பருக்கள் சரியாகும். மேலும் தோலில் ஏற்படும் தடிப்புகள், வறண்டச் சருமம் போன்றவற்றிற்கும் தயிர் சிறந்த தீர்வாகும்.

  கேசத்தைப் பாதுகாக்கும்:

  தயிர் ஒரு பயனுள்ள கூந்தல் சீரமைப்பு மருந்தாகும். இது ஆரோக்கியமான, வலிமையான மற்றும் மென்மையான கேச அழகினை தரக்கூடியது. தயிரை முடியின் வேரில் படும் வகையில் மசாஜ் செய்து வந்தால் பொடுகு தொல்லை நீங்குவதோடு, முடி உதிர்வையும் குறைக்கும்.

  செரிமானத்தை அதிகரிக்கும்:

  பாலில் குறிப்பிட்ட பாக்டீரியாவின் வளர்ச்சியினாலேயே அது தயிராக மாறுகிறது. இந்நிலையில் இந்தத் தயிரை நாம் உண்பதன் மூலம் அது உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்கள் என்று கூறப்படும் பாக்டீரியாக்களை வளரச்செய்து, உணவு குழாய் மற்றும் வயிற்றின் ஆரோக்கியத்தைக் காக்கும். இரைப்பையில் பிரச்னை உடையவர்கள் தயிர் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏதுவாக இருந்தாலும் அதைத் தயிர் சீர் செய்துவிடும். மேலும் வயிற்றில் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறையும் ஒரு வகையான அமிலத்தைச் சுரக்கச்செய்து தயிர் குணமாக்கிவிடும். 

  நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்:

  தினமும் தயிர் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு இல்லாத காரணத்தால் ஏற்படக்கூடிய தொற்று நோய் பிரச்னைகள் வருவதைத் தடுக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவுகளே சொல்கிறது. உடலிற்குத் தேவையான அடிப்படை நோய் பாதுகாப்பிற்கான கட்டமைப்பைத் தயிரால் வழங்க முடியும். புற்றுநோய் வருவதற்கான அபாயத்தையும் குறைத்து இளம் முதிர்ச்சி ஏற்படுவதையும் தடுக்கும். 

  தொற்றில் இருந்து பாதுகாக்கும்:

  பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஈஸ்ட் தொற்று எனப்படும் பெண்ணுறுப்பில் வரும் தொற்றை தயிர் சாப்பிடுவதன் மூலம் தவிர்க்கலாம். தொடர்ந்து ஆறு மாதங்களுக்குத் தினசரி தயிர் சாப்பிடுவதன் மூலம் பெண் யோனியில் வரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் குணமாவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. 

  நாட்டு மருத்துவம் முதல் சித்த மருத்துவம் வரை அனைத்திலும் தயிர் தவிர்க்கமுடியாத ஒரு மருந்தாக இருந்து வருகிறது. பல அறிய நோய்களையும் தீர்க்கக் கூடிய தயிர் எளிதாக நாம் வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளக் கூடிய ஒன்று. ஆகையால் அனைத்து பிரச்னைகளுக்கும் மருத்துவரைத் தேடி ஓடாமல் நமது அன்றாட உணவு முறையில் ஒரு சிறிய மாற்றம் செய்வதன் மூலம், உணவே மருந்தாக அமையும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai