சுடச்சுட

  

  குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஊட்டச் சத்துள்ள கஞ்சி

  By கோவை பாலா  |   Published on : 11th August 2019 11:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  parenting_article_(dont_pamper_ur_children)

  திணைக் கஞ்சி

  தேவையான பொருட்கள்

  திணை மாவு - 50 கிராம்
  கடலை பிண்ணாக்கு மாவு - 25 கிராம்
  மொச்சைக் கொட்டை மாவு -  15  கிராம்
  வெல்லம் -  20  கிராம்

  செய்முறை

  திணையை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். கடலை பிண்ணாக்கு வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். மொச்சைக் கொட்டையை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தைத் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். வறுத்து அரைத்துள்ள மாவுகளை நன்றாக கலந்து வெந்நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். மெதுவாக இந்த கரைத்த மாவை கொதிக்கும் வெல்லத் தண்ணீரில் கிளறிக் கொண்டே ஊற்றவும். பின்பு 15 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.

  பயன்கள் : இந்தக் கஞ்சியை மிதமான சூட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் அதிக ஊட்டச்சத்து உள்ளதால் இது எளிதில் செரிமானமாகி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் .

  இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai