Enable Javscript for better performance
உடல் எடை குறைப்பு மற்றும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் மிக்க பானம்- Dinamani

சுடச்சுட

    

    உடல் எடை குறைப்பு மற்றும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் மிக்க பானம்

    By கோவை பாலா  |   Published on : 04th June 2019 10:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    home-remedies-for-abortion-papaya

     

    பப்பாளி - பைன் ஆப்பிள் பானம்

    தேவையான பொருட்கள்

    நன்கு கனிந்த பப்பாளி துண்டுகள் - 100 கிராம்
    பைன் ஆப்பிள் பழத் துண்டுகள் - 100 கிராம்
    ஊற வைத்த வெந்தயம். - 25 கிராம்
    எலுமிச்ச பழச்சாறு தோலோடு - 50 மி.லி
    தேன் - 3 தேக்கரண்டி
                                                      
    செய்முறை : முதலில் பப்பாளி துண்டுகள், பைன் ஆப்பிள் துண்டுகள், ஊற வைத்த வெந்தயம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் எலுமிச்ச பழச்சாறு மற்றும் தேன் கலந்து நன்றாக கலக்கி அருந்தவும்.

    பலன்கள் : இந்த பானம் உடல் எடை குறைப்பிற்கு சிகிச்சை எடுப்பவர்கள் எடுக்கும் உணவில் இணை உணவாக மதிய வேளை எடுத்துக் கொண்டால் உடலில் உண்டாகியிருக்கின்ற தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கும்.

    குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
    96557 58609 / Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai