Enable Javscript for better performance
weight loss techniques- Dinamani

சுடச்சுட

    

    உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை நீராக கரைத்து வெளியேற்றும் அற்புத குளிர்பானம்!

    By கோவை பாலா  |   Published on : 07th June 2019 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    student

     

    ஆப்பிள் - வெள்ளரிக்காய் குளிர்பானம்

    தேவையான பொருட்கள்

    இனிப்பு ஆப்பிள் -  2
    நடுத்தரமான வெள்ளரிக்காய் -  2 
    எலுமிச்சம் பழச்சாறு - 50 மி.லி
    தண்ணீர் - 200 மி.லி
    தேன் - 2 தேக்கரண்டி

    செய்முறை : ஆப்பிள்  மற்றும் வெள்ளரிக்காய் இரண்டையும் சிறிதாக அரிந்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி தேன் கலந்து பருகவும்.

    பயன்கள் : இந்த குளிர்பானத்தை காலை அல்லது மதிய வேளை உணவு சாப்பிட்ட பின்பு இதனை குடித்து  வந்தால் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை  நீராக கரைத்து உடலை விட்டு வெளியேற்றும்.

    பலன்கள் : இந்த பானம் உடல் எடை குறைப்பிற்கு சிகிச்சை எடுப்பவர்கள் எடுக்கும் உணவில் இணை உணவாக மதிய வேளை எடுத்துக் கொண்டால் உடலில் உண்டாகியிருக்கின்ற தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கும்.

    குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
    96557 58609 / Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai