எது நல்ல கொலஸ்ட்ரால் எது கெட்ட கொலஸ்ட்ரால்? புதிய ஆய்வில் சர்ச்சை!

கொலஸ்டிரால் என்பது கொழுப்பில் ஒரு வகை. நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஸ்திரத்தன்மையை அளிப்பது கொலஸ்டிரால்தான். 
எது நல்ல கொலஸ்ட்ரால் எது கெட்ட கொலஸ்ட்ரால்? புதிய ஆய்வில் சர்ச்சை!

கொலஸ்டிரால் என்பது கொழுப்பில் ஒரு வகை. நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் உறுதித்தன்மையை அளிப்பது இந்த கொலஸ்டிரால்தான். 

நம் உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்தை பெரும்பாலான செல்கள் தாமே உற்பத்தி செய்து கொள்கின்றன. தேவை ஏற்படும் போதெல்லாம் கல்லீரல் கொலஸ்ட்ராலை சற்று அதிகப்படியாக உற்பத்தி செய்து மற்ற பாகங்களுக்கும் அனுப்புகிறது. உடல் இயக்கத்துக்குத் தேவையான பித்தநீர் சுரப்பு, நரம்புகளின் செயல்திறன், ஹார்மோன் உற்பத்தி என பலவற்றை இது காரணியாகிறது.

இந்நிலையில் கொழுப்பு சத்துள்ள உணவை சாப்பிட்டால் இதய நோய்கள் வரும் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான புரிதல் என்கிறது புதிய ஆய்வு. 

உணவின் மூலமாக கொழுப்பு 10-லிருந்து 15 சதவிகிதம் மட்டும்தான் உடலுக்குக் கிடைக்கிறது. மீதி கொழுப்புச் சத்தை உடல் தானே உற்பத்தி செய்து கொள்கிறது என்பதுதான் உண்மை.உணவின் மூலமாக கொலஸ்டிராலை கட்டுப்படுத்த முடியாது என்று வாதிட்டனர் நிபுணர்கள். இந்த ஆய்வில் இதய நோய்க்கும் கொழுப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபித்தனர் ஆய்வாளர்கள். அந்த ஆய்வினை ஏற்ற அமெரிக்க அரசு, இதயப் பிரச்னைகளுக்கும் கொலஸ்டிராலுக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

உணவு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று உணவைப் பிரித்து பிரித்து எத்தனை பேரால் சாப்பிட முடியும். குப்பை உணவு மற்றும் வாழ்வியல் முறைகளின் பின்விளைவுகளால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆனால் இதயப் பிரச்னைகளுக்கு காரணம் கொலஸ்டிரால் ஒரு கொழுப்பு, எனவே கொழுப்புள்ள உணவை கட்டுப்படுத்தினால் இதய பிரச்னை சரி செய்யலாம் என்பது தவறானது.

உடல் செறிக்கக் கூடிய அளவுக்கு, அளவான உணவை உட்கொள்ளுதல் தான் அடிப்படையானது. தவிர கொலஸ்டிரால் பற்றி கூகுள் செய்து உண்மையான தகவல்களைத் தேடிப் பிடித்து படித்தால் தெளிவு ஏற்படும். எது நல்ல கொலஸ்டிரால், எது கெட்டது என்பது போன்ற சர்ச்சை தேவையா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com