இதைப் படித்தபின் ஏய் சுண்டைக்காய் என்று இனி யாரையும் சொல்லமாட்டீர்கள்!

சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள். 
சுண்டைக்காய்
சுண்டைக்காய்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது போல பார்க்க சிறிய அளவில் இருந்தாலும், சுண்டைக்காயின் பயன்கள் அனேகம். முக்கியமாக சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு அதிகம் உள்ளது. பலவிதமான நோய்களுக்கு மருந்தாக சுண்டைக்காயை பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள் என்னவென்று பார்க்கலாம்.

  1. இன்சுலின் பயன்படுத்தாத சர்க்கரை நோயாளிகள் சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  2. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்க கூடியது. பார்வைத் திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
  3. சுண்டைக்காய் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும். அதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துவிடும்.
  4. காய்ச்சல் ஏற்பட்டால் இதை உணவில் சேர்த்தால் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்கும்.
  5. சுணைக்காயில் ரிபோஃபோளோவின், தயமின் இருப்பதால் அது வாய் புண்களையும் சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கக் கூடியது.
  6. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
  7. சுண்டைக்காயின் மருத்துவ குணம் என்னவெனில் இது உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் புண்களை விரைவாக ஆற வைக்கும்.
  8. இளம் தாய்மார்களுக்கு சுண்டைக்காய் வரப்பிரசாதம். இது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும். 
  9. சுண்டைக்காயில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ரத்த சோகையை தவிர்க்கும். உடலின் நச்சுகளை வெளியேற்றிவிடும்.
  10. காய்ந்த சுண்டைக்காய்ப் பொடியில், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.. அடிக்கடி உணவில் கலந்து சாப்பிட உடல் புத்துணர்ச்சி அடையும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com