தாங்க முடியாத வயிற்று வலிகள் வருமுன் காக்கும் ஆரோக்கிய பானம்

முதலில் கோதுமை, பச்சரிசி இரண்டையும் தனித்தனியே வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தாங்க முடியாத வயிற்று வலிகள் வருமுன் காக்கும் ஆரோக்கிய பானம்

நவதானியக் கஞ்சி

தேவையான பொருட்கள்
 
கோதுமை - 100  கிராம்
பச்சரிசி - 100 கிராம்
பாசிப் பயிறு - 100 கிராம்
கொண்டைக் கடலை - 100 கிராம்
மொச்சைக் கொட்டை - 100  கிராம்
எள்ளு - 100  கிராம்
உளுந்து - 100  கிராம்
கொள்ளு - 100  கிராம்

செய்முறை : முதலில் கோதுமை, பச்சரிசி இரண்டையும் தனித்தனியே வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற தானியங்களை 5 மணி நேரம் தனித்தனியே ஊற வைத்து பின் வடிகட்டி ஒரு துணியில் முடிச்சுக் கட்டித் தொங்கவிடவும். அல்லது காற்றுப் புகாத டப்பாவில் மூடி வைத்து 10 மணி நேரம் கழித்துத் திறக்க முளை விட்டியிருக்கும். முளை கட்டிய பயிறுகளை உலர்த்தியப் பின் வறுத்துக் கொள்ளவும். பின்பு ஏற்கனவே வறுத்துள்ள கோதுமை அரிசியுடன் முளை கட்டிய பயிறுகளைச் சேர்த்து ஒன்றாக கலந்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : அரைத்து வைத்துள்ள நவதானியங்களை இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 100 மி.லி அளவு தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து கட்டி தட்டாமல் கிளறி நன்கு வெந்து நிறம் மாறியதும் அதனுடன் பால் அல்லது மோர் மற்றும் உப்பு சேர்த்து குடிக்கலாம். இந்த நவதானியக் கஞ்சியை வயிற்று உபாதைகள் நிறைந்துள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உபாதைகள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியத்தை வழங்கும். மேலும் இந்தக் கஞ்சி உடலுக்குத் தேவையான சத்தையும் வழங்கும் ஆற்றல் உள்ள உணவு.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com