ஓட்ஸ்தான் உங்களுக்குப் பிடிக்குமா? எச்சரிக்கை இதைப் படித்தால் இனி தவிர்த்துவிடுவீர்கள்!

நம் முன்னோர்கள் எப்படி சாப்பிட வேண்டும், எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்று சொல்லி வைத்துத்தான் சென்றுள்ளார்கள்.
ஓட்ஸ்தான் உங்களுக்குப் பிடிக்குமா? எச்சரிக்கை இதைப் படித்தால் இனி தவிர்த்துவிடுவீர்கள்!

நம் முன்னோர்கள் எப்படி சாப்பிட வேண்டும், எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்று சொல்லி வைத்துத்தான் சென்றுள்ளார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதையெல்லாம் மறந்து நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சில உணவுகள் நம் உடலுக்கு தேவையே இல்லாதவை என்றால் அதிர்ச்சியாக உள்ளதா? உண்மைதான். தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உள்ளது. அது அவசியம் இல்லாத பொருள். சந்தையில் திணிக்கப்பட்ட உணவிது. இதனால் மிகப்பெரிய நன்மைகள் எதுவும் இல்லை. மாறாக சரியாக உட்கொள்ளாவிட்டால், உடல் பருமன், சர்க்கரை நோய், உள்ளிட்ட நோய்களுக்கு வித்திடும்.

ஓட்ஸ் என்பது நன்றாகக் கொதிக்க வைத்து, குடிக்கக் கூடிய ஒருவகைக் கஞ்சி வகைதான். இது பசியினை மட்டுப்படுத்தும். ஆனால் இது நம் நாட்டில் விளையக் கூடிய உணவுப் பொருள் இல்லை. வெளிநாடுகளில் அதிகளவு உற்பத்தியாகும் ஓட்ஸ் அங்கு அதிகம் உபயோகப்படுத்தப்படாமல் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. அப்படி வர்த்தக நோக்கில் வந்து சேர்ந்த ஒரு உணவுப் பொருள்தான் ஓட்ஸ். ஆனால் இது தெரியாமல் இன்று அன்றாட உணவின் ஒரு பகுதியாக பலர் அதனை உட்கொள்கிறார்கள். எங்கிருந்து வந்தால் என்ன அதை சாப்பிடுவதால் உடல்நலம் போஷிக்கப்படும் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுவும் இல்லை.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். அதிக நேரம் பசி தாங்க அவர்களுக்கு ஓட்ஸ் உணவு பயன்பட்டது. இதில் சில நாடுகளில் ஓட்ஸை குதிரைக்கு அளிக்கும் உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவான அது இந்தியாவிற்கு இறக்குமதியாகி வருவது வியாபார நோக்கின்று வேறு எதுவுமல்ல. 

ஓட்ஸ் என்ற பெயர் அறிமுகமாகிய சமயத்தில் அதில் கஞ்சி செய்துதான் குடித்தார்கள். ஆனால் தற்போது ஓட்ஸில் வகை வகையான உணவு தயாரிக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது. காரணம் சந்தையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய எதுவும் நம் பிரியமான உணவுப்பொருளாக விரைவில் மாறிவிடும். மேற்கில் நம்முடைய இட்லியையும், சப்பாத்தியையும் கொண்டாடிக் கொண்டிருக்க, நாமோ அவர்கள் வேண்டாம் என தூக்கி எறிந்த மிச்ச உணவுப் பொருட்களை உட்கொள்கிறோம். அதுவும் இது நம் உடல் நலத்துக்குத் தேவையா இல்லையா என்று சிந்திக்காமலேயே. நிச்சயம் இதில் சில நன்மைகள் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் அது நம் மண்ணில் விளைந்த உணவுப் பொருட்களை விட எந்த அளவும் உயர்ந்தது இல்லை. மேலும் இது சில தீமைகளையும் உள்ளடக்கியுள்ளது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

ஓட்ஸுடன் வேறு உணவுப் பொருட்களை சேர்த்து சமைக்கக் கூடாது. ஓட்ஸ் தயாரிக்கும் வழிமுறைகளை அதன் அட்டையில் குறிப்புக்களாக பதித்திருப்பார்கள். அதைப் படித்து அதன்படி தயாரிப்பது நலம்.

ஓட்ஸில் தனிப்பட்ட எந்த சுவையும் கிடையாது. அதனால் சிலர் சுவை சேர்க்க அதில் சாக்லேட் போட்டு சாப்பிடுவார்கள். சிலர் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழ வகைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால் ஓட்ஸில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைப்பது இல்லை.

ஓட்ஸில் சிலர் பாயாசம் தயாரிப்பார்கள். சிலருக்கு ஓட்ஸ் பொங்கல் பிடிக்கும். ஆனால் இவை ஆரோக்கியமான உணவு இல்லை. ஓட்ஸுடன் அதிகளவு சர்க்கரையை சேர்த்தால் உடல் எடை அதிகரிக்கும்.

ஓட்ஸில் மாவுச்சத்தும், நார்ச்சத்தும் மிக அதிகளவு உள்ளதால் இதைச் சாப்பிடும் போது குறைவாக சாப்பிடுவது நல்லது.

நம் நாட்டில் விளையும் வரகு, சாமை, தினை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்கள் ஓட்ஸை விட பன்மடங்கு அதிகமான சத்துக்களை கொண்டுள்ளது. எனவே ஆரோக்கியமாக வாழ்க்கை முறைக்கு மாற முதல்படி நம் மண்ணில் விளைந்த உணவுகளை சாப்பிடுவதுதான். பீட்ஸா, பர்கர், ஓட்ஸ், ஆலிவ் ஆயில் போன்ற அந்நிய நாட்டு உணவுகள் நம் உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகளுக்கும் அந்நியமானவைதான் என்பதை உணருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com