பிரசவத்தின் போதான மரணத்தை தடுக்கும் புதிய மருந்து!

பெண்கள் பிரசவத்தின் போது மரணமடைவது பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிறகு
பிரசவத்தின் போதான மரணத்தை தடுக்கும் புதிய மருந்து!
Published on
Updated on
1 min read

பெண்கள் பிரசவத்தின் போது மரணமடைவது பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மேலதிகமான ரத்தப் போக்கு, நோய்க்கிருமிகளின் தாக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால்தான். இதற்குத் தீர்வாக சமீபத்தில் இன்ஹேலர் வடிவில் புதிய மருந்து ஒன்றினை மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பெண்கள் பிரசவத்தின் போது ஏற்படும் அதிகளவு ரத்தப்போக்கினால் விளையும் திடீர் மரணத்தைத் தடுத்துவிட முடியும் என்கிறார்கள் இவர்கள்.

ஊசி மூலம் செலுத்தப்பட்டுவந்த ஆக்ஸிடோசின் எனும் மருந்து, இப்போது தூள் வடிவில் தயாரித்துள்ளார்கள். இந்த தூளை இன்ஹேலரில் அடைத்து.  பிரசவத்துக்கு முன் இந்த மருந்தை வாய் வழியே இன்ஹேலரின் துணையுடன் உறுஞ்சுவதன் மூலம் பிரசவ சமயத்தில் ஏற்படக்கூடிய போஸ்ட்பார்டம் ஹெமரேஜ் postpartum haemorrhage (PPH)அல்லது போஸ்ட்பார்டம் ப்ளீடிங் (postpartum bleeding)போன்ற பிரச்னைகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்த்துவிடலாம். 

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுதும் 3,00,000 பெண்கள் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளனர். பொருளாதரீதியாக பின் தங்கிய நாடுகளில் மிக அதிக அளவில் பெண்கள் பிரசவத்தின் போது மரணம் அடைகிறார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்குக் காரணம் போதிய மருத்துவ வசதி இல்லாதாதும், அத்தியாவசிய மருந்துகளை உரிய முறைகளில் பாதுகாக்க முடியாததும் என்பது வருத்தமடையச் செய்யும் உண்மை. இதற்குக் தீர்வாக இந்த கண்டுபிடிப்பு இருக்கும் காரணம் முன்பு ஊசி வடிவத்தில் ஆக்ஸிடோசின் இருந்ததால் அதை பாதுகாப்பது கடினமாக இருந்துவந்தது. தவிர திறமையான மருத்துவர்களால் மட்டுமே அதை கவனமாகக் கையாள முடியும். ஆனால் இப்போது இன்ஹேலர் வடிவில் வந்துவிட்ட ஆக்ஸிடோசினை பாதுகாப்பதும் எளிது, பயன்படுத்துவதும் சுலபம். 

இந்த கண்டுபிடிப்பால் குறைந்த மருத்துவ வசதி இருக்கும் இடங்களில் கூட இன்ஹேலரைப் பயன்படுத்தி தேவையற்ற உயிர் இழப்புகளைத் தடுத்துவிடலாம் என்றார் ஆராய்ச்சிக் குழு தலைவர் மிஷல் மெக்டோஷ். இந்த ஆராய்ச்சி முடிவுகள் மூலம் ஆக்ஸிடோசின் இன்ஹேலர் அல்லது ஊசி மூலம் செலுத்தப்படலாம், ஆனால் அந்தந்த சூழல்களுக்கு ஏற்ப, அந்தப் பயன்பாடு இருக்கும். தவிர இந்த ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து புதிய மருந்தொன்றை தயாரிக்கவேண்டும் எனவும் அதற்கு அதிக செலவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பமடையாத சில பெண் தன்னார்வலர்களுக்கு இரண்டு விதத்திலும் ஆக்ஸிடோசின் தரப்பட்டது. இன்ஹேஸர் மூலம் கொடுக்கப்பட்ட மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது இரண்டும் ஒரே பலனைத் தந்தது என கண்டறிந்தனர்.  இந்த ஆராய்ச்சி முடிவுகள் தென் ஆப்ரிகாவிலுள்ள ராயல் கல்லூரியில் செய்வாக்கிழமை வெளியிடப்பட்டது. (Royal College of Obstetricians and
Gynaecologists World Congress in Cape Town, South Africa)

MIPSஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து லண்டன் க்ளாஸ்கோ ஸ்மித்க்ளைன் (GlaxoSmithKline) நிறுவனம் இந்த தூள் வடிவ இன்ஹேலர் வகை ஆக்ஸிடோசின் மருந்தை தயாரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com