மூளை நன்றாக வேலை செய்ய வேண்டுமா?

பல சந்தர்ப்பங்களில் நன்றாகத் தூங்கினால் நம் மூளையின் செயல்திறன் நன்றாக இருப்பதை நாமே உணர்ந்திருப்போம்.
sleep
sleep

பல சந்தர்ப்பங்களில் நன்றாகத் தூங்கினால் நம் மூளையின் செயல்திறன் நன்றாக இருப்பதை நாமே உணர்ந்திருப்போம். ஓய்வு எடுப்பது என்பது வேறு உறக்கம் என்பது வேறு. எவ்வாறாயினும், வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வு தூக்கத்தினால் விளையும் மூளைச் செயல்திறன் பற்றி விரிவாக விளக்குகிறது. அதன் சுருக்கம் இது :

இந்த ஆய்வுக்காக நிபுணர்களின் கண்டுபிடிப்பு என்னவென்றால், ஒரு நாளில் 10 முதல் 20 நிமிட பவர் ரெஸ்ட் எடுப்பது மூளையில் செரிப்ரமில் ரசாயன மாற்றங்களை உருவாக்குகிறது.

உங்கள் சுறுசுறுப்பை அதிகரிக்க, நிபுணர்கள் கூறும் பரிந்துரை, 10 முதல் 20 நிமிட பவர் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு அதன் பின் வேலைக்குத் திரும்பலாம்.

அடுத்து பகலில் ஒன்றரை மணி நேர உறக்கம் உங்கள் உற்சாகத்தை தூண்டும் கற்பனா சக்தியை அதிகரிக்கும். புதிய விஷயம் ஏதாவது கற்றுக் கொள்ளவோ, புதிய வேலையொன்றை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் போதோ அதற்கு முன் தூங்கி விழித்தெழுந்தால், அந்த வேலையை வெகு சிறப்பாக செய்து முடிப்பீர்கள் என்கிறார்  டாக்டர் மெட்னிக். இரவில் மட்டுமில்லை,  பகலில் கூட இவ்வகையான REM ஓய்வை நீங்கள் எடுக்கலாம். சிறிய அளவிலான தூக்கம்தான் என்றாலும் அதிகப் பலன்களைத் தரக்கூடியது.

தூங்குவதற்கு ஒரு சில நொடிகளுக்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி நினைத்துக் கொண்டு அதன்பின் தூங்குங்கள். அது மிகச் சிறந்த பலன்களைத் தரும் என்கிறார்கள் நிபுணர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com