மணிரத்னம் 

மணிரத்னம் தமிழ்த் திரையுலகில் முக்கியமான இயக்குனர். அவரின் ஹெல்த் விஷயங்களும் அவரைப் போலவே வெகு சிம்பிள்.
மணிரத்னம் 
Published on
Updated on
1 min read

மணிரத்னம் தமிழ்த் திரையுலகில் முக்கியமான இயக்குனர். அவரின் ஹெல்த் விஷயங்களும் அவரைப் போலவே வெகு சிம்பிள்.

தினமும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து விடும் பழக்கம் உடையவர். நேராகச் செல்வது கோல்ப் மைதானத்துக்குத் தான். ஏழு மணி வரை உற்சாகமாக கோல்ப் விளையாடுவார். 

காலையில் பில்டர் காபி, சிறிது நேரம்கழித்து ஓட்ஸ் அல்லது பழங்கள். இட்லி அல்லது தோசை, அதன் பின் ஜூஸ். மதியம் மிக குறைவான சாதத்துடன் கீரை மற்றும் காய்கறிகள். தயிர், எண்ணெய், ஸ்வீட்ஸ் போன்றவற்றை தவிர்த்துவிடுவார். மாலை ஜூஸ். இரவு உணவாக எதாவது லைட் டிபன். சரியான நேரத்துக்கு தூங்குவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பார்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஜிம்முக்குச் சென்று கார்டியோ வொர்க் அவுட்ஸ் செய்வார்.

தினமும் தவறாமல் யோகா செய்வார். கடுமையான ஆசனங்களைக் கூட பயிற்சியாளர் உதவியின்றி தானே செய்வார். 

ஷூட்டிங் இல்லாத சமயங்களில், புத்தகங்கள் வாசிப்பது, சினிமா பார்ப்பது இது தான் நாளின் பெரும்பகுதியை செலவிடுவார்.

தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்  எதிர்வினை செய்ய மாட்டார். இரண்டையும் புறம்தள்ளி விடுகிற இயல்புடையவர்.

உடை  தேர்வில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார். சிம்பிளாக பருத்தி ஆடைகள் போதும் இவருக்கு,

அமைதி விரும்பி இவர். தன் படத்துக்கான கதைகளை தனிமையில் எழுதுவதை விரும்புவார்.

வீட்டிலும் அலுவலகத்திலும் பிரத்யேகமான அழகான தோட்டம் வைத்திருப்பவர். இயற்கை எழில் மிகவும் பிடிக்கும். 

கொடைக்கானலில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுசுக்கு கோடைக் காலத்துக்கு சென்று ரெஸ்ட் எடுப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com