பெரும்பாலும் பிரிவில் முடியும் பதின் வயது நட்புக்கள்! ஆய்வு முடிவு தெரிவிக்கும் அதிர்ச்சி அறிக்கை!

'நண்பேண்டா' என்று இளசுகள் ஒட்டுமொத்தமும் நட்பைக் கொண்டாடி வரும் காலகட்டம் இது.
பெரும்பாலும் பிரிவில் முடியும் பதின் வயது நட்புக்கள்! ஆய்வு முடிவு தெரிவிக்கும் அதிர்ச்சி அறிக்கை!

'நண்பேண்டா' என்று இளசுகள் ஒட்டுமொத்தமும் நட்பைக் கொண்டாடி வரும் காலகட்டம் இது. ரத்த சொந்தங்கள், உறவினர்கள் என எல்லோரையும் இரண்டாம் பட்சமாகவும் துச்சமாகவும் நினைக்கும் இவர்கள் நட்புக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் சில சமயம் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டால் அந்த நட்பில் விரிசல்கள் ஏற்படுவது சாத்தியம்தான். அதுவும் பதின் பருவத்தில் ஆரம்பத்திலேயே பிரச்னை ஆகிவிட்டால் அந்த நட்பு அப்படியே முறிந்துவிடுகிறது என்கிறது ஒரு ஆய்வு.

ஒத்த அலைவரிசையில் இருக்கும் வளர் இளம் பருவத்தினருக்குள் ஏற்படும் நட்பு நீண்ட காலம் தொடரும். ஆனால் எதாவது சண்டை அல்லது பிரச்னை ஏற்பட்டுவிட்டால் சின்ன விஷயங்களில் அது முடிந்து விடுகிறது என்கிறார் அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ப்ரெட் லார்சன்.

410 டீன் ஏஜ் மாணவர்களை வைத்து சோதனை நடத்த ஆரம்பித்தார். அவர்களின் ஏழாவது கிரேடு முதல் பனிரெண்டாம் கிரேடு வரை ஆராய்ச்சி தொடர்ந்தது. இதில் கால் சதவிகிதத்தினரின் நட்பு ஏழாம் கிரேடிலிருந்தது போலவே அடுத்த வருடத்திலும் தொடர்ந்தது. மற்றவர்கள் அடுத்தடுத்த வருடங்களில் பெரிய வகுப்பு வர வர நட்பை முறித்துக் கொண்டார்கள்.

ஒரே ஒரு சதவிகிதம் மட்டுமே கடைசி வரையில் நட்பைத் தொடர்ந்தார்கள். இதற்குக் காரணம் பாலின வேறுபாடுகள், அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அடி தடி விஷயங்கள் மற்றும் படிப்பு சார்ந்த போட்டி பொறாமைகள் போன்றவை. எல்லாவற்றையும் விட ஆண் பெண் நட்பு பிரச்னைகளுக்குத்தான் முதலிடம். அடுத்து நீ பெரியவனா நான் பலசாலியா போன்ற பிரச்னைகளால் ஏற்படும் வன்முறை. அதற்கடுத்த கட்டத்தில் போட்டி மனப்பான்மை, மற்ற மாணவர்களுக்கு முன் தன்னுடைய நண்பனுக்கு அதிக வரவேற்பு இருப்பதை பொருத்துக் கொள்ள முடியாமை போன்ற விஷயங்கள். 

நட்பு என்றாலே எல்லாவற்றையும் கடந்த ஒரு அன்பு. ஆனால் இந்த வயதில் மனத்தின் கொதிப்பு நிலை, எளிதில் முடிவெடுக்க முடியாத தன்மை, பெற்றவர்கள் முதல் சுற்றம் வரை அனைவரும் கொடுக்கும் அழுத்தம் போன்றவை பதின் வயதினரை ஏற்கனவே அழுத்த நிலையில் வைத்திருக்கும். நண்பர்கள்தான் உலகம் என்று இருக்கையில் அங்கேயும் பிரச்னை என்கையில் அவர்கள் மன அழுத்தத்திற்கும் உள்ளாக நேரிடும். புரியாமை, அல்லது முன் கோபம் போன்றவை நீடித்த நட்புக்கு தடை. தவறான நட்புகளை களைந்து வாழ்க்கை முழுவதும் உறுதுணையாக வரும் நட்பை தக்க வைத்துக் கொள்வதே நல்லது என்கிறார் லாரிசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com