புது தில்லி, ஏப்.8: சித்திரவதை தடுப்புச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மனித சித்திரவதையை மனிதாபிமானமற்ற செயலாக ஐக்கியநாடுகள் சபை குறிப்பிட்டு கடுமையான குற்றமாக அறிவித்துள்ளது. இதே அளவுக்கு தண்டனைக்குரிய குற்றமாக சித்திரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சித்திரவதை தடுப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது.
மனித சித்திரவதை என்பது மனிதாபிமானமற்ற செயல் என்று ஐக்கிய நாடுகள் சபையில் 1975-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக 1997-ல் நடைபெற்ற மாநாட்டில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது குறித்து பல கட்டங்களாக விவாதிக்கப்பட்டது. பின்னர் இதைத் தடுப்பதற்கு தனி சட்டம் கொண்டு வருவதென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி வரைவு அறிக்கை 2009-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்று மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.
ஐக்கியநாடுகள் சபை மாநாட்டு தீர்மானத்தை ஒத்த வகையில் தற்போதைய சட்டம் இருக்கும். இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் தண்டனை அளிப்பதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய சட்ட கமிஷனுடன் இது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அட்டர்னி ஜெனரலுடனும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இப்புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.